Header Ads



முஸ்லிம் மையவாடியில் கட்டிடம் அமைத்த, கோத்தபய ராஜபக்ஸவின் ஆதரவாளர்


கொழும்பு - மாளிகவத்தை மையவாடியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டிடம் கட்டிய உபாலி ஜயசிங்க முள்ளாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபய ராஜபக்ஸவுக்கு மிகவும் நெருக்கமானவர் என முஸ்லிம் சட்டத்தரணி ஒருவர், ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறினார்.

கோத்தபய ராஜபக்ஸ நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராகவும் நியமிக்கபட்டிருந்தார்.

முஸ்லிம்களுக்குச் சொந்தமான மையவாடியை சட்டவிரோதமாக கைப்பற்றி, அதில் சட்டவிரோத கட்டிடம் நிறுவியமையானது முஸ்லிம்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதுதொடர்பிலான வழக்குகள் தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.

மாளிகாவத்தை - முஸ்லிம் மையவாடியில் உபாலி ஜயசிங்க உபாலி ஜயசிங்க சட்டவிரோதமாக கட்டியுள்ள கட்டிடத்தையே இந்த படத்தில் காண்கிறீர்கள்.

1 comment:

  1. Let see what action Yahapalanaya will take..............

    ReplyDelete

Powered by Blogger.