Header Ads



மாற்றுத் திறனாளிகளுக்குரிய இடத்தில் காரை நிறுத்திய குவைத் அமைச்சர் அபராதம் செலுத்தினார்

குவைத் நாட்டில்  25-03-2016 அன்று வர்த்தகத் துறை அமைச்சர் டாக்டர் யூசுஃப் அல் அலி மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்தத்தில் தவறுதலாக தனது காரை நிறுத்தி விட்டார். 

அங்கு பணியிலிருந்து போக்குவரத்து காவலர் அமைச்சரின் கார்தானே என்று கண்டு கொள்ளாமல் இருக்கவில்லை. 

உடன் அபராத தொகைக்கான ரஷீதை அந்த வாகனத்தில் வைக்கிறார் காவலர். அமைச்சரும் கோபப்பட்டு 'எனக்கே அபராதம் விதிக்கிறாயா?' என்று குதிக்கவில்லை. புன்முறுவலோடு அந்த பில்லை எடுத்துக் கொள்கிறார்.

நம் நாட்டு அமைச்சர்களின் காருக்கு இவ்வாறு அபராத தொகை போட்டு விட்டு அந்த காவலர் வீடு திரும்பி விட முடியுமா?

1 comment:

  1. Good example. This what Islam preach, It is equality.Lot of these type of incident could see in the life of Khalifa's.

    ReplyDelete

Powered by Blogger.