Header Ads



மதுபானக் கடை வைத்திருக்கும் அரசியல்வாதிகளின், விபரங்கள் எனக்கு வேண்டும் - மைத்திரி


மதுபானசாலை அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிதி அமைச்சர் ரவி கருணநாயக்கவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள அமச்சரவைக் கூட்டத்தில் இந்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளார். நேற்று முன்தினம் ஜனாதிபதி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் நூறு பேருக்கு மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் உண்டு என வெளியான தகவல்களை அடுத்து இந்த அறிக்கையை கோரியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க அமைச்சரவைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் 100 பேருக்கு மதுபான சாலை அனுமதிப்பத்திரங்கள் காணப்படுவதாகவும், அவை எந்தக்காலத்தில் வழங்கப்பட்டன

அவற்றை யார் நடாத்திச் செல்கின்றனர் என்பது பற்றிய விபரங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமென அமைச்சர் சமரசிங்க கோரியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை வழங்கவில்லை எனவும் இது குறித்து ஐயமின்றி தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கை ஒன்றை வெளியிடப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி நிதி அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இந்த அறிக்கையை சமர்ப்பிப்பதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க இணங்கியுள்ளார்.

No comments

Powered by Blogger.