Header Ads



மைத்திரிக்கு பதிலாக மகிந்த, என அழைத்தவர் ராஜினாமா - மறுத்தார் அமைச்சர்


விவசாய அமைச்சின் செயலாளர் பதவியை ராஜினாமா செய்த போதிலும் துறைசார் அமைச்சர் அதனை நிராகரித்துள்ளார்.

விவசாய அமைச்சின் செயலாளர் பி.விஜேரட்ன இவ்வாறு ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்த போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச என தனது உரையில் விஜேரட்ன கூறியிருந்தார்.

இந்த சம்பவத்திற்கு வருத்தம் வெளியிட்டு தனது ராஜினாமா கடிதத்தை அவர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவிடம் சமர்ப்பித்திருந்தார்.

கடந்த 7ம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் பெயரை மாற்றிக் கூறியதற்காக அப்போதே மன்னிப்புக் கோரிய அமைச்சின் செயலாளர், பின்னர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார்.

எனினும், இந்த ராஜினாமாவை அமைச்சர் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.