மஹிந்த ராஜபக்சவிற்கு "வொயிஸ் கட்" நோய்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வொய்ஸ் கட் நோய் ஏற்பட்டுள்ளதாக பதில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துனேஸ் கன்கந்த தெரிவித்துள்ளார்.
பல்மடுல்ல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
கல்யாண வீடு, மரண வீடு, சாமத்திய வீடு மற்றும் மயானங்களுக்கு சென்று ஊடகங்களிடம் மஹிந்த ராஜபக்ச கருத்து வெளியிட்டு வருகின்றார்.
குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவிற்கு வொயிஸ் கட் நோய் ஏற்பட்டுள்ளது.
கல்யாண வீடு மரண வீடு உள்ளிட்ட எந்தவொரு நிகழ்விற்கு சென்றாலும் ஊடகங்களுக்கு வொயிஸ் கட் (குரல்பதிவு) வழங்குவதற்கு முயற்சிக்கின்றார்.
1970ம் ஆண்டு முதல் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனுபவம் மிக்க அரசிலய்வாதியான மஹிந்த ராபஜக்ச நாடாளுமன்றிலேயே தனது கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும்.
நாடாளுமன்றை மதித்தால் நாடாளுமன்றில் தனது விமர்சனங்களை முன்வைக்க முடியும். தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு நாடாளுமன்றில் பதிலளிக்க முடியும்.
மாறாக அங்கும் இங்கும் செல்லுமிடமெல்லாம் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுவது பொருத்தமானதாக அமையாது.
நிறைவேற்று ஜனாதிபதி என்ற ரீதியில் சிறந்த முறையில் தனது பதவிக்கான மரியாதையை வழங்கி ஓய்வு பெற்றுக் கொள்ளாது மஹிந்த ராஜபக்ச அதிகார மோகம் காரணமாக தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட்டு வருவதாக துனேஸ் கன்கந்த தெரிவித்துள்ளார்.
Post a Comment