உலகிலேயே மிகச்சிறந்த ஆசிரியை
பாலஸ்தீனிய நாட்டில் உள்ள அகதிகளுக்கு ஆசிரியராக பணியாற்றி வந்த பெண் ஒருவர் உலகிலேயே மிகச் சிறந்த ஆசிரியராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக போப் பிரான்சிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
Hanan Al Hroub என்ற பெயருடைய அந்த ஆசிரியர் ஆரம்பம் முதல் பாலஸ்தீனத்தில் உள்ள Bethlehem அகதிகள் முகாமில் தங்கி அகதிகளுக்கு ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
குறிப்பாக, வன்முறையால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் இருக்கும் குழந்தைகளுக்கு அவர் பாடம் எடுத்து வருகிறார்.
துபாயில் நேற்று -13- நடந்த ‘உலகின் சிறந்த ஆசிரியரை’ தெரிவு செய்யும் நிகழ்ச்சியில் தன்னுடன் போட்டியிட்ட உலக ஆசிரியர்களை வெற்றி பெற்று Global Best Teacher விருதினை தட்டிச் சென்றுள்ளார்.
இதே நிகழ்ச்சியில் கத்தோலிக்க மதத் தலைவரான போப் பிரான்சிஸ் மற்றும் பிரித்தானிய இளவரசர் வில்லியம் உள்ளிட்டவர்கள் வீடியோ மூலம் வாழ்த்து செய்திகளை அனுப்பியுள்ளனர்.
அதில், ‘உலகில் அமைதியை நிலை நாட்ட ஆசிரியர்கள் பெரிதும் உதவுகின்றனர். ஆசிரியர்களின் சேவை மேன்மேலும் தொடர வேண்டும்’ என போல் பிரான்சிஸ் வாழ்த்தியுள்ளார்.
’மாணவர்களை வழிநடத்தி அவர்களுக்கு வளமான எதிர்காலத்தை வடிவமைத்து தருவதில் ஆசிரியர்கள் பெரும் பங்கு கொண்டுள்ளனர்’ என இளவரசர் வில்லியம் பாராட்டியுள்ளார்.
விருதினை பெற்ற Hanan Al Hroub பேசியபோது, ’உலகின் தலைச்சிறந்த ஆசிரியராக தெரிவு செய்யப்பட்டு இந்த மேடையில் ஒரு பாலஸ்த்தீனிய பெண் ஆசிரியராக நிற்பதற்காக நான் மிகவும் பெருமை படுகிறேன்.
எனக்கு கிடைத்துள்ள இந்த பரிசு தொகையை பயன்படுத்தி அகதி மாணவர்களின் முன்னேற்றுத்திற்காக பாடுபடுவேன்’ என உருக்கமாக பேசியுள்ளார்.
al hathu lilah avarhalukku malunm malum arivai athi karithitovayaha
ReplyDeleteAlhamthulilah
ReplyDeleteஇதெல்லாம் சந்தோசப்பட வேண்டிய விடையம் கிடையாதுங்க.. இலுமினாட்டிகளுக்காகவும், யூத சியோனிஸ்டுகளுக்காகவும் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறவங்கதான் இவங்களெல்லாம். பலஸ்தீன் குழந்தைகள்ல உள்ளங்கள்ல வன்முறை கூடாதுன்னு கற்பிற்கிற இவங்களக் கொண்டுபோய் யூத இஸ்ரேலியக் குழந்தைகளுக்கு ஏன் பாடம் சொல்லிக்கொடுக்கக் கூடாது. முதல்ல இஸ்ரேலுக்குப் போய் அன்கெயுள்ள குழந்தைகளுக்கு உலகத்த எப்படி அமைதியா வச்சுக்கிறதுன்னு சொல்லிக் கொடுக்க சொல்லுங்க! அதக்கப்புறம் பலஸ்தீனக் குழந்தைகளுக்கு வன்முற வேணாமுன்னு சொல்லிக் கொடுக்கலாம். போதுங்களா?
ReplyDeleteHithaythullah, don't said like this about teacher she is teacher we must respect to her..
ReplyDelete