Header Ads



மகிந்த தலைமையில் கூட்டு எதிர்க்கட்சியின் பேரணி

கூட்டு எதிர்க்கட்சியின் முதலாவது மக்கள் கூட்டம் மஹிந்த ராஜபக்ச தலைமையில் எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 17ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் கொழும்பு ஹைட் மைதானத்தில் இந்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

கூட்ட எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இந்த தகவல்களை வழங்கியுள்ளார்.

ஞாயிறு சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்…

படைவீரர்களுக்கு எதிராக செயற்படுவதனை நிறுத்துமாறு கோரியும், விவசாயிகளுக்கான நிவாரணங்கள் நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளியிட்டும், மக்கள் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டும், தேர்தல்கள் உரிய நேரத்தில் நடத்தப்படாமையை எதிர்த்தும் பாரியளவில் பேரணியொன்றும் கூட்டமொன்றும் நடத்தப்படவுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் தலைவர்களுக்கு மேலதிகமாக ஐந்து கட்சிகளின் தலைவர்களும் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

நாட்டுக்கும் இனத்திற்கும் எதிரான சக்திகளை முறியடிக்கும் தேசிய போராட்டத்தின் முதல் கட்டமாக இந்தக் கூட்டத்தை கருத முடியும் என டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.