செயலாளர் பதவிக்கு, போட்டி ஆரம்பம்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் விஷ்வா வர்ணபாலவின் மறைவுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தூண்களுக்கு இடையில் பனிப்போர் ஆரம்பமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நம்பிக்கையை வென்றுள்ள பலர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்களாகும், அத்துடன் இந்த மோதல் ரகசியமாக வெளியாவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தப்பா கூட்டமைப்பின் செயலாளர் பதவியை தனக்கு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக சுதந்திர கட்சியின் தலைமையக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அத்துடன் சுசில் பிரேமஜயந்த, எஸ்.பீ.திஸாநாயக்க, டிலான் பெரேரா, மஹிந்த சமரசிங்க மற்றும் அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோருடன் மேலும் பலர் இந்த பதவிக்கு கண் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எப்படியிருப்பினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு நம்பிக்கையான ஒருவரை இந்த பதவிக்காக எதிர்வரும் வாரத்தில் நியமிக்கவுள்ளார் என கூறப்படுகின்றது.

Post a Comment