பௌத்த பிக்குகளுக்கு எதிரான, அடக்குமுறைகளை கண்டித்து போராட்டம்
பௌத்த பிக்குகளுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்து போராட்டம் நடத்தப்பட உள்ளதாக பெவிதி ஹன்ட அமைப்பு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ம் திகதி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பிக்கு ஒடுக்குமுறை மற்றும் சட்டவிரோத கொள்கைகளை கண்டித்து இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
கொழும்பு விஹார மஹாதேவி பூங்காவில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
கடந்த 14 மாத காலப்பகுதியில் நல்லாட்சி அரசாங்கம் 48 பௌத்த பிக்குகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக முரத்தட்டுவே ஆனந்த தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
வெள்ளையர்களின் ஆட்சிக் காலத்தில் கூட இவ்வாறு பௌத்த பிக்குகள் துன்பங்களை அனுபவித்தது கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த பிக்குகள் துன்புறுத்தப்படுவதனை பார்த்துக் கொண்டு பௌத்த பிக்குகள் வேடிக்கை பார்ப்பது ஆச்சரிமளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
நாடு, இனம், மதம் பற்றி பேசிய பௌத்த பிக்குகளே சிறைக்கு செல்ல நேரிட்டுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த விடயம் பற்றி பேசும் பௌத்த பிக்குகள் தேசத் துரோகிகளாகவும், இனவாதிகளாகவும் அடையாளப்படுத்தப் படுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் பௌத்த பிக்கு விரோத செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரியளவில் போராட்டம் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment