Header Ads



தென்கொரியா முழுவதையும், எரித்து சாம்பலாக்குவோம் - வடகொரியா


வடகொரியாவின் அணுஆயுத அச்சுறுத்தலைத் தொடர்ந்து தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கொரிய எல்லைப் பகுதிகளில் கடந்த மார்ச் 7- ஆம் திகதி முதல் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றன.

இதுகுறித்து வடகொரியாவின் அதிகாரபூர்வ ஊடகமான கேசிஎன்ஏ நேற்று -25- வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

எதிரி நாடுகள் எங்களுக்கு சவால் விடுக்கின்றன. அதற்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். போர் மூண்டால் தென்கொரியா தலைநகர் சியோல் உட்பட அந்த நாடு முழுவதையும் எரித்து சாம்ப லாக்குவோம்.

தற்காப்புக்காக வடகொரிய ராணுவமும் தற்போது போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

வடகொரியா அண்மையில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியது. மேலும் நீண்ட தொலைவு பாயும் ஏவுகணைகளை யும் சோதித்துப் பார்த்தது. இதற்கு அமெரிக்கா உட்பட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. International wan't do any think to south koriya. On the other hand international and neighbours Muslim country they had Doubt in Iraq their possession weapon of mass destruction and invade the country and destroyed it. How is the good example. This will be dealt in day of judgment by allah.

    ReplyDelete

Powered by Blogger.