தோல்வியடைந்த இலங்கை அணிக்கு தைரியமூட்டி, ஆறுதல்சொன்ன மைத்திரி
உலகக் கிண்ண டுவன்ரி-டுவன்ரி போட்டித் தொடரில் தோல்வியைத் தழுவிய இலங்கை அணிக்கு டுவிட்டர் சமூக வலைளத்தளம் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறுதல் கூறியுள்ளார்.
நேற்றையதினம் -27- டெல்லியில் நடைபெற்ற சுப்பர்10 சுற்றுப் போட்டியொன்றில் இங்கிலாந்து அணியிடம் இலங்கை தோல்வியைத் தழுவியிருந்தது.
இதனால் உலகக் கிண்ண போட்டித் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பினை இலங்கை அணி இழந்துள்ளது.
இந்த நிலையில் இலங்கை அணிக்கு தைரியமூட்டும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
வெற்றி தோல்வி எதுவாயினும் இலங்கை கிரிக்கட் அணியின் திறமை பெருமிதம் அளிப்பதாகவும் சிறந்த முறையில் விளையாடியதாகவும் ஜனாதிபதி தனது டுவிட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த தடவை மிகவும் வலுவான நிலையில் இலங்கை அணியினர் திறமைகளை வெளிப்படுத்துவார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Thank you but next win if they shuffle the cards with talanted players...Mathew, Dilshan, Thisara, Herath (sometime only), Vandersay, Kapugedara (sometime only), Shanaka...OK Others all waste.....
ReplyDeleteSelectors should concern minority players as well to respect the country's minorities too
Also you will get blessing from God too if you do so...
Lets see