Header Ads



பள்ளிவாசலா..? தேவாலயமா..??


ஸ்பெயினின் வரலாற்று பிரசித்தி பெற்ற கோர்டோபா பள்ளிவாசல் மற்றும் தேவாலயத்திற்கு கத்தோலிக்க திருச்சபை கோரிய உரிமையை உள்ளூர் நிர்வாகம் நிராகரித்துள்ளது. இது மத சடங்குகளுக்கான சொத்து அல்ல என்று அது குறிப்பிட்டுள்ளது.

இந்த கட்டடம் தொடர்பில் நீண்டகாலமாக நீடிக்கும் சர்ச்சைக்கு நகர கவுன்ஸிலின் அறிவுப்பு குறிப்பிடத்தக்க தலையீடாக கருதப்படுகிறது. 8 ஆம் நுற்றாண்டு தேவாலயமான இந்த கட்டடம் முஸ்லிம்களின் ஆட்சிக்குப் பின்னர் பள்ளிவாசலாக மாற்றப்பட்டது.

எனினும் 1236இல் நகரம் கிறிஸ்தவ படையிடம் வீழ்ந்தபோது இந்த கட்டடம் கிறிஸ்தவ நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது. எனினும் இந்த கட்டடத்தை தேவாலயம் மற்றும் பள்ளிவாசல் என்று இணைத்து அழைப்பதிலும் தொடர்ந்து சர்ச்சை நீடித்து வருகிறது.

எனினும் நகர கவுன்ஸில் அறிவிப்பில், இந்த கட்டடம் தேவாலயத்திற்கோ அல்லது ஏனைய அமைப்புகள் மற்றும் தனி நபர்களுக்கோ சொந்தமானது அல்ல என்று குறிப்பிட்டுள்ளது. தேவாலயத்தின் உரிமை கோரல் சட்ட அடிப்படையானது அல்ல என்றும் அது கூறியுள்ளது. 1984 ஆம் ஆண்டு இந்த கட்டடம் யுனெஸ்கோ மரபுரிமை சொத்தாக அறிவிக்கப்பட்டது. 

No comments

Powered by Blogger.