பெல்ஜிய விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு, வானத்தில் வட்டமடிக்கும் விமானங்கள் (படங்கள்)
பெல்ஜியத்தின் தலைநகரான பிரசல்ஸின் விமான நிலையமொன்றில் இரண்டு குண்டு வெடிப்புகள் இடம் பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்படி ,குண்டு வெடிப்பு சவெண்டம் என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
பெல்ஜியம் தலைநகரான பிரஸ்சல்ஸில் உள்ள விமான நிலையத்தில் நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்தில் 11 பேர் பலியாகியுள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரஸ்சல்ஸில் உள்ள Zaventem என்ற விமான நிலையத்தில் சற்று முன்னர் இரண்டுக்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் வெடிக்கும் பலத்த ஓசை எழுந்ததை தொடர்ந்து விமான நிலையம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்துள்ளது.
மேலும், இந்த விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் Antwerp விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
அதேசமயம், சில விமானங்கள் தரையிறங்கவும் முடியாமல், மற்ற விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பவும் முடியாமல் Liege நகருக்கு மேல் இன்னும் வட்டமடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில நிமிடங்களுக்கு முன்னர் வெளியான தகவலில் இந்த விமான நிலையத்தில் உள்ள அமெரிக்க விமான நிறுவன உதவி மையத்திற்கு அருகில் இந்த வெடிவிபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனை செய்ததில் வெடிக்காமல் இருந்த பல வெடிகுண்டுகளை கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.
தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, இது தீவிரவாத தாக்குதல் தான் என அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.
Post a Comment