Header Ads



வசீம் தாஜூன் கொலை விசாரணை, நாடகமாக மாறியுள்ளது - விமல் வீரவன்ச

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி சிறையில் உள்ள புலி உறுப்பினர்களை விடுதலை செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்று -02-  புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

வாஷிங்டனில் இடம்பெற்ற இரகசிய பேச்சுவார்த்தையை அடுத்து, வடக்கில் இராணுவ முகாம்கள் அமைந்துள்ள காணிகளை கைப்பற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் உறவினர்கள் மற்றும் அவருடன் இணைந்து செயற்படும் அரசியல் தலைவர்களை சிறையிலிடும் நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகள் தீவிரமடைந்து விட்டது.

இதற்கு எதிராக எதிர்வரும் 17ம் திகதி கொழும்பில் பாரிய பேரணியை நடத்த உள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சி குறிப்பிட்டுள்ளது.

பிரதமர் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் இன்று வெளிப்படையாக ஊடகவியலாளர்களையும் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர்களையும் அச்சுறுத்துகின்றனர்.

ஆனால் ஊடக அமைப்புகளும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தினரும் மௌனித்து போயுள்ளனர். என்றார்.

பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனின் கொலை தொடர்பான விசாரணை நாடகமாக மாறியுள்ளது.

2 comments:

  1. No one do drama after 08th Jan-2015..you & your gange only do the lots of drama

    ReplyDelete
  2. You are a racist actor in this world. You do not know about the good governance

    ReplyDelete

Powered by Blogger.