அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ள, மர்மக் கும்பல் சதி - "அரச ஊடகம்"
கொழும்பில் தலைதூக்கி வரும் பாதாள உலகக்கும்பல்களின் தாக்குதல் சம்பவங்கள் அரசாங்கத்துக்கு எதிரான சதி நடவடிக்கைகள் என்று அரசாங்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த பாதாள உலகக்கும்பல் தாக்குதல்கள் அனைத்தும் உண்மையான பாதாள உலகக்கும்பல்களின் மோதல்கள் என்பதற்கு அப்பால் வேறொரு மர்மக்கும்பல் இத்தாக்குதல்களை நடத்தும் சாத்தியம் இருப்பதாக குறித்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியில் பாதுகாக்கப்பட்ட போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ள நிலைமையில் இத்தாக்குதல் சம்பவங்கள் நடைபெறறத் தொடங்கி இருக்கின்றமை சந்தேகத்தை தோற்றுவிப்பதாக உள்ளது.
எனவே இத்தாக்குதல்களின் பின்னணியில் அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளும் நோக்கம் இருப்பதுடன், குறித்த நோக்கில் மர்ம கும்பல் ஒன்றே இச்சம்பவங்களில் தொடர்புபட்டிருக்கலாம் என்றும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment