Header Ads



புத்தளம் முஸ்லிம்களின் கல்வி அபிலாஷைகளும், முன்மொழிவுகளும்..!!


அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு "முஸ்லிம் கல்வியின் தற்போதைய நிலைகளும் எதிர்கால சவால்களும்" எனும் தலைப்பில் புத்தளம் மாவட்டத்துக்கான கருத்தரங்கினை புத்தளம் மதுரங்குளி மேர்சி கல்வி வளாகத்தில் 23.3.2016 இல் நடத்திய போது அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் தவிசாளர் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் அவர்களிடம் புத்தளம் மாவட்ட முஸ்லிம்களின் கல்வி அபிலாஷைகள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் :

1. புத்தளம் கல்வி வலயம் புத்தளம், ஆனமடுவ என்று இரு வேறு கல்வி வலயங்களாக உருவாக்கப்படல் வேண்டும்.

2. வடமேல் மாகாணத்தில் உள்ள வயம்ப பல்கலைக்கழகத்தின் வளாகம் ஒன்று புத்தளம் பிரதேசத்தில் நிறுவப்பட வேண்டும்.

3. புத்தளம் மாவட்டத்தில் 20% தமிழ் பேசும் மக்கள் வாழ்வதால் தேசிய கல்வியியல் கல்லூரி ஒன்று புதிதாக உருவாக்கப்பட வேண்டும்.

4. புத்தளம் மாவட்டத்தில் தொழில் நுட்பக் கல்லூரி ஒன்று நிர்மாணிக்கப்பட வேண்டும்.

5. புத்தளம் கல்வி வலயத்தில் நிலவும் 550 தமிழ் மொழி மூல ஆசிரிய வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.

6. புத்தளம் மாவட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவும் பௌதீக, மனித வளப் பற்றாக்குறைகள் தீர்க்கப்பட வேண்டும்.

7.புத்தளம் மாவட்டத்தில்சகல வசதிகளும் கொண்ட தொழில் சார், தொழில் பயிற்சி நிறுவனம் நிர்மாணிக்கப்பட வேண்டும்.

8. புத்தளம் திறந்த பல்கலைக் கழகத்தின் கற்கை நெறிகள் விஸ்தரிக்கப்பட்டு மேலும் பௌதீக, மனித வளங்கள் வழங்கப்பட வேண்டும்.

9. புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியின் சகல வித தேவைகளும் முழுமையாக பூர்த்தி செய்து கொடுக்கப்பட வேண்டும். அக்கல்லூரிக்கு புதிதாக புத்தளம் போல்ஸ் வீதியில் அமைக்கப்பட்டு வரும் கட்டிட தேவைகள் முழுமையாக நிறைவு செய்து கொடுக்கப்பட வேண்டும்.

10. மௌலவி ஆசிரியர் நியமனங்கள் துரிதமாக வழங்கப்பட வேண்டும்.

11. அஹதிய்யா சன்மார்க்க போதனா பீடங்கள் அறநெறி பாடசாலை அந்தஸ்த்துக்கு உரிய முறையில் தரமுயர்த்தப்பட்டு, பௌத்த அறநெறி பாடசாலைகளுக்கு வழங்கப்படும் சகல வசதிகளும் வழங்கப்பட வேண்டும்.

12. சகலருக்கும் ஆங்கிலம் என்ற அடிப்படையில் இலவசமாக ஆங்கில வகுப்புக்கள் சகல மட்டத்தினருக்கும் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

13. புத்தளம் மாவட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகளில் வெற்றிடமாக உள்ள உள்ள சகலவித ஆளணியினரும் நிரப்பப்பட வேண்டும்.

14. முன்பள்ளி பாடசாலைகளுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். அவற்றில் கற்பிக்கும் ஆசிரியைகளுக்கு முறையான பயிற்சி மற்றும் நியாயமான கொடுப்பனவுகள் அரசால் வழங்கப்பட வேண்டும்.

15. புத்தளம் மாவட்ட முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினைகளை உரிய முறையில் ஆய்வு செய்து, ஆவணப்படுத்தி, அரசியல் சமூக ஆன்மீக தலைமைகளின் கவனத்துக்கு கொண்டு வருவதோடு மாகாண முதலமைச்சர், மாகாண கல்வியமைச்சர், கல்வியமைச்சர், உயர் கல்வியமைச்சர், பிரதமர், ஜனாதிபதி ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும்.

No comments

Powered by Blogger.