நாட்டின் பௌத்த சாசனமே, பௌத்தத்திற்கு அச்சுறுத்தல் - ரணில் சாட்டையடி
-Gtn-
நாட்டின் பௌத்த சாசனமே, பௌத்த சாசனத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ரத்தினபுரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த மதத்தின் கௌவரத்தை சீர்குலைக்கும் வகையில் சில பௌத்த பிக்குகள் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துதல், பலவந்தமாக விஹாரைகளை கைபற்றுதல், யானைக் குட்டிகளை வர்த்தகம் செய்தல், மாணிக்கக்கல் வர்த்தகத்தில் ஈடுபடுதல் என பல்வேறு வழிகளில் கௌரவத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
அனைத்து பௌத்த பிக்குகளும் அவ்வாறு இல்லை என்ற போதிலும் சில நாயக்க தேரர்களும் இவ்வாறு மதத்திற்கு இழிவு ஏற்படும் வகையில் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்திலிருந்து பிரான்ஸிலிருந்து மருந்து தருவித்து அதனை உடம்பில் பூசிக் கொண்டு வெயிலில் இருப்பவர்களை பௌத்த பிக்குகளாக கருதப்பட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
வரே வா...........
ReplyDelete