Header Ads



"இஸ்லாம் அமெரிக்காவை வெறுக்கிறது", முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் மாற்றமில்லை' - ட்ரம்ப்


அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான, குடியரசுக் கட்சியின் வேட்பாளர் போட்டியில் முன்னணியில் இருக்கின்ற டோனல்ட் ட்ரம்ப், முஸ்லிம்களுக்கு எதிரான அவரது கடும்போக்கு நிலைப்பாட்டை மீண்டும் நியாயப்படுத்தி வாதிட்டுள்ளார்.

நேரடி தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் அவரது போட்டியாளர்கள் முன்வைத்த கடுமையான விமர்சனங்களுக்கு நடுவே, டோனல்ட் ட்ரம்ப் தனது நிலைப்பாட்டை தொடர்ந்தும் நியாயப்படுத்தி பேசியுள்ளார்.

"இஸ்லாம் அமெரிக்காவை வெறுக்கிறது" என்ற ட்ரம்ப்-இன் கோசத்தை சவாலுக்கு உட்படுத்திய அவரது போட்டியாளரான ஃபுளோரிடா மாநில செனெட்டர் மார்க்கோ ரூபியோ, பல முஸ்லிம்கள் அமெரிக்கர்கள் என்று பெருமைப்படுவதாகக் கூறினார்.

எல்லா முஸ்லிம்களும் கெட்டவர்கள் என்று கத்துவதன் மூலம் இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு தீர்வு கண்டுவிட முடியாது என்று இன்னொரு போட்டியாளரான டெக்ஸாஸ் மாநில செனட்டர் டெட் குரூஸ் கூறினார்.

தான் தெரிவித்த கருத்துக்களில் மாற்றம் இல்லை என்று ட்ரம்ப் கூறினார்.

ஃபுளோரிடா மற்றும் ஓஹியோ ஆகிய மாநிலங்களில் சில தினங்களில் நடக்கவுள்ள முக்கிய உட்கட்சி வாக்கெடுப்புக்கு முன்னதாக இந்த விவாதம் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. அமெரிக்காவே இஸ்லாத்தை வெறுக்கிறது.

    ReplyDelete
  2. Who cares bloody Americana. Wait and see the status of America in 100 years

    ReplyDelete

Powered by Blogger.