Header Ads



"அடுத்த பாராளுமன்றத் தேர்தலில், பிரதமராகும் எண்ணத்தில் மைத்திரி" - ரில்வின் சில்வா


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராகும் எண்ணத்தில் இருக்கின்றார் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் மைத்திரி, பிரதமராகும் எண்ணத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மாத்தளையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை முற்று முழுதாக அகற்றப்படும் என  அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த பொதுத் தேர்தலில் பிரதமராக போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்களின் சேவை மக்களுக்கு கிடைக்காத காரணத்தினால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.