Header Ads



மலைப் பாம்பு டிப்ஸ்..!


அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டவர், மலைப்பாம்பை டிப்ஸாக கொடுத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இரோகா சுசி டோக்கியோ என்ற பிரபலமான ஓட்டல் உள்ளது. அங்கு சாப்பிட வந்த ஹிரோஷி மோடோஹசி என்பவர், சுமார் 13 ஆயிரம் ரூபாய்க்கு சாப்பிட்டார். 

அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவர் வைத்திருந்த பை அசைவதைப் பார்த்த மற்றவர்கள் அது குறித்து விசாரித்தனர். அந்த பையில் ஒரு சிறிய பாம்பு இருப்பது தெரிய வந்தது. அதைப் பார்த்ததும் ஓட்டல் நிர்வாகிகள் ஆட்சேபிக்கவே, அவர் வாக்குவாதம் செய்தார். பின்னர் கோபமாக ஓட்டலில் இருந்து வெளியேறினார்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் ஓட்டலுக்குள் வந்த அவர், 13 அடி நீள மலைப்பாம்பை ஓட்டலுக்குள் விட்டு விட்டு சென்று விட்டார். இதைத் தொடர்ந்து அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் 50 ஆயிரம் டாலர் ஜாமீனில் விடப்படார். இந்த நபர் செய்த களேபரத்தால், ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் பீதியில் உறைந்து போயினர்.

No comments

Powered by Blogger.