காத்திருக்கும் நாய்..
ரஷ்யாவில் கார் விபத்தில் பலியான தனது முதலாளி திரும்ப வருவார் என அவரது வளர்ப்பு நாய் கடந்த ஒரு வருடமாக விபத்து நடந்த இடத்தில் காத்துக்கொண்டு இருப்பது உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய கூட்டமைப்பை சேர்ந்த செர்பியாவில் உள்ள Berkut என்ற பகுதியில் தான் இந்த அதிசயமான சம்பவம் நிகழ்ந்து வருகிறது.
இந்த பகுதியில் கடந்த 2014ம் ஆண்டு ஒரு பயங்கரமான கார் விபத்து ஏற்பட்டு, அதில் பயணித்த நபர் ஒருவர் பலியாகியுள்ளார். ஆனால், காரில் இருந்த அவரது நாய் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது.
இந்த சம்பவம் நிகழ்ந்த நாள் முதல் இன்று வரை அந்த நாய் விபத்து நடந்த இடத்திலேயே சுற்றி சுற்றி வந்துக்கொண்டு இருக்கிறது.
இந்த காட்சியை பார்ப்பவர்கள் ‘உயிரிழந்த தனது முதலாளி திரும்ப வருவார்’ என்பதற்காகவே இந்த நாய் இதே பகுதியில் சுற்றி திரிந்து வருவதாக கூறிவருகின்றனர்.
நாயை அடிக்கடி பார்த்த வாகன ஓட்டிகள் நாய் மீது பாசம் கொண்டு அதற்காக சிறிய குடிலை சாலை ஓரமாக கட்டி வைத்தார்கள். நாயை சில நாட்கள் அதில் தங்கி வந்துள்ளது.
ஆனால், ஒரு நாள் லொறி ஒன்று குடில் மீது ஏறியதில் நாய் பிழைத்துக்கொள்ள குடில் மோசமாக சேதம் அடைந்தது.
எனினும், இந்த சம்பவத்திற்கு பிறகும் சில நபர்கள் புதிதாக குடில் ஒன்றை எழுப்பி நாயிற்கு உதவியுள்ளனர்.
ஆனால், தங்குவதற்கு குடில் இருந்தாலும் கூட அந்த நாய் அங்கு இருக்காமல், விபத்து நடந்த இடத்திலேயே எப்போதும் அமர்ந்து தனது முதலாளியை எதிர்ப்பார்த்து வருகிறது.
நாயின் நிலையை அறிந்த கார் ஓட்டிகள் நாய்க்கு தினமும் உணவளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலரான Anastasia Selina என்பவர் பேசியபோது, ’நாங்கள் பல நாட்கள் முயற்சி செய்தும் நாயின் அருகில் கூட செல்ல எங்களால் முடியவில்லை.
பலியான தனது முதலாளியை மட்டுமே அது எதிர்ப்பார்த்து உள்ளதாக தெரிகிறது.
மேலும், மற்றவர்கள் யார் மீதும் நம்பிக்கை வைக்க அந்த நாய் மறுத்து வருகிறது. எனவே, அப்பகுதியை கடக்கும் யாரும் அந்த நாயை துன்புறுத்த வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளோம்.
ஏனெனில், நாயிடம் அச்சத்தை ஏற்படுத்தினால், அந்த குழப்பத்தில் சாலையின் நடுவே ஓடி விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது’ என அச்சம் தெரிவித்துள்ளார்.
சாலை விபத்தில் தனது முதலாளி பலியாகி ஒரு வருடம் கடந்த நிலையிலும், அவர் தன்னை திரும்ப வந்து அழைத்துச் செல்வார் என அந்த நாய் இது நாள் வரை காத்துக்கொண்டு இருப்பது அப்பகுதியை சேர்ந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Post a Comment