நல்லாட்சியின் பெரும் தலைவலி
மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த காலப்பகுதியில் அரச நிறுவனங்களால் பெறப்பட்ட கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டுக் கடன்களால், சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் பெரும் தலைவலியை எதிர்நோக்கியுள்ளது.
அரச நிறுவனங்கள் மகிந்த ஆட்சிக்காலத்தில் வெளிநாட்டுக் கடன்களைப் பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டன. அந்த விபரங்கள் வரவுசெலவுத் திட்டங்களில் உள்ளடக்கப்படவில்லை என்று சிறிலங்கா மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுனர் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.
கணக்கில் காட்டப்படாத கடன்களாக எவ்வளவு தொகை பெறப்பட்டுள்ளது என்று விசாரணை செய்ய வேண்டிய பொறப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தக் கடன்களால், சிறிலங்காவின் கடன் தர நிலை கீழ் இறங்கியுள்ளது. அடுத்து 12 மாதங்களுக்குள் இந்த நிலையை சீர் செய்யாது போனால், தரநிலை மேலும் கீழ் செல்லும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment