புற்றுநோய் ஸ்கேன் இயந்திரம் வாங்க, பள்ளிவாசல்களில் நிதி திரட்ட நடவடிக்கை
-ARA.Fareel-
மஹரகமை தேசிய புற்றுநோய் வைத்தியசாலைக்கு அன்பளிப்புச் செய்யப்படவுள்ள 20 கோடி ரூபா பெறுமதியான புற்றுநோய் ஸ்கேன் இயந்திரத்தை கொள்வனவு செய்வதற்கான நிதி நாட்டிலுள்ள ஜும்ஆப் பள்ளிவாசல்களின் உதவியுடன் திரட்டப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான மஹரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலையின் உத்தியோகபூர்வ அறிவித்தல் சகல ஜும்ஆ பள்ளிவாசல்களின் அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
பொதுமக்கள் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள புற்றுநோய் வைத்தியசாலையின் பிரத்தியேக வங்கிக் கணக்குக்கு நிதியுதவியினை அனுப்பிவைக்க முடியும்.
குறிப்பிட்ட புற்றுநோய் ஸ்கேன் இயந்திரத்தை அன்பளிப்பு செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கதீஜா பவுண்டேசன் பள்ளிவாசல் அறிவித்தல் பலகைகளை இந்த முயற்சிக்காக உபயோகப்படுத்துவதற்கு முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் அமைச்சின் அனுமதியை கோரியதற்கிணங்க அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமின் பிரத்தியேக செயலாளர் எம்.எச்.எம்.பாஹிம் தெரிவித்தார்.
பள்ளிவாசல்களின் ஜும்ஆ பிரசங்கங்களில் புற்றுநோய் ஸ்கேன் இயந்திரம் அன்பளிப்பு தொடர்பான விபரங்களை உள்ளடக்கிக் கொள்வதற்காக முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக கதீஜா பவுண்டேசனின் தலைவர் எம்.எஸ்.எச்.முஹம்மட் தெரிவித்தார்.
பொது மக்கள் இதற்காக நிச்சயம் உதவுவார்கள் இன்சா அல்லாஹ்,ஆனால் ஏற்கனவே பொதுமக்களது தலையின் மேல் ஐந்தரை லட்சம் ரூபாய் கடனை சுமத்திய கடந்த கால ராசாவிடமும் அவரது ராசதாணியை சேர்ந்தவர்களிடமும் இருக்கும் கொள்ளையடித்த பணத்தினை மீட்டெடுத்து இதுபோன்ற நாட்டிற்கு தேவையான இன்னோரன்ன தேவைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.
ReplyDeleteYes,correct....
ReplyDeleteMashaAllah
ReplyDeleteஇது ஒரு ஸதகத்துல் ஜாரியாவில் இதுவும் சேரும் தாராளமாக அள்ளிக் கொடுக்காக வேண்டும் இதனால் பயன்பெறும் நோயாளி யாராக இருந்தாலும் நன்மைக்குரிய விடயமாகும்
ReplyDeleteதயவு செய்து இதனை ஒரு முஸ்லிம் நிறுவனத்தின் ஊடாக வசூல் செய்து முஸ்லிம்கள் சார்பாக வைத்திய சாலைக்கு கொடுத்தால் நல்லது என்பது எனது கருத்து, ஆகவே ஒரு முஸ்லிம் நிறுவனத்தின் ஊடாக வங்கி கணக்கு ஒன்றை திறந்து அதனை உறுதி செய்து எனக்கு அனுப்பி வைக்கவும் சவுதியில் நிறைய தனவந்தர்கள் தயாராக இருக்கார்கள் இங்கு வேலைசெய்யும் இலங்கையர்களும் கூட
ReplyDeletefowzeral@gmail.com
please mentioned contact person also
முஸ்லிம் பள்ளிவாசல்கள் செய்யும் நல்ல ஒரு செயல், மற்ற மதங்களுக்கும் பல பாடங்களை சொல்லிக் கொடுக்கும் செயல்.
ReplyDeleteகொழும்பில் பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை பகல், பெரிய தொழுகை முடிந்ததும், பள்ளிவாசல் கட்டிட நிர்மாணம் என்று சொல்லி வாசலில் வசூல் செய்வதை கண்டு இருக்கிறேன்.
இது நல்ல ஒரு முயற்சி. பாராட்டுக்கள். எல்லா மத நல்லுள்ளம் கொண்டவர்களும் உதவ வேண்டும்.
இப்படியான நல்ல வேலைகளை செய்யும் பொழுது, தீவிர, தப்பான சிந்தனைகள் அகற்றப்படும்.