Header Ads



'இயல்பு நிலையை சீர்குலைக்க முயற்சியாம்' - தௌஹீத் ஜமாஅத் பிரமுகர்களுக்கு விளக்கமறியல்

-சகா-

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்  அமைப்பின் அம்பாறை மாவட்ட செயலாளருக்கும், சாய்ந்தமருது கிளை செயலாளருக்கும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைத்து விசாரிக்குமாறு  கல்முனை நீதிவான் நீதிமன்றதினால் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி சாய்ந்தமருது கடற்கரை  பிரதேசத்தில் சட்டவிரோதமாக பொலிஸ் அனுமதி பெறாமல் ஒலிபெருக்கி பயன்படுத்தி பிரச்சாரக் கூட்டம் நடாத்தியதை  கல்முனை பொலிசார் தடுத்து நிறுத்தியதுடன் ஒலிபெருக்கி சாதனங்களையும் பறிமுதல் செய்து  நீதி மன்றில் முன்னிலைப் படுத்தினர் . 

இதன் போது  குழப்பம் ஏற்படுத்தி  பிரதேசத்தின் இயல்பு நிலையை சீர்குலைக்க முற்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்  அமைப்பின் அம்பாறை மாவட்ட செயலாளர்  முபீன் இசாய்ந்தமருது கிளை செயலாளர் அப்துல் சமது சதாத்  ஆகியோர் கைது செய்யப்பட்டு  கடந்த செவ்வாய்க்கிழமை  கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப் பட்டனர்.

பொலிசாரினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் கைதான இருவருக்கும் பிணை மனு கோரிய  விண்ணப்பத்தை சட்டத்தரணிகளான சறூக் காரியப்பர், இமனார்தீன்  ஆகியோர் நீதிபதியிடம்  முன்வைத்த போதும் கல்முனை நீதிவான் நீதி மன்ற நீதிபதி எம்.ஐ.பயஸ் ரஸாக் பிணை மனுவை நிராகரித்தார் .

இதன் பிரகாரம் குறித்த இருவருக்கும் எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைத்து விசாரிக்குமாறு பொலிசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்பு பட்ட ஏனைய சந்தேக நபர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவுள்ளதாக கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு .அப்துல்கபார் தெரிவித்தார் 

1 comment:

  1. I heard there are 26 branches in Thouheeth jamath. Which group do they belong to? They are the prople who create troubles everywhere. Will you stop making bayan at night using loud speakers?

    ReplyDelete

Powered by Blogger.