சுவிட்சர்லாந்துடன் இலங்கை உடன்படிக்கை
இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கையில் நல்லிணக்க முனைப்புக்களில் முன்னேற்றம் பதிவாகியுள்ளதாக சுவிட்சர்லாந்து சுட்டிக்காட்டியுள்ளது.
சுவிட்சர்லாந்திற்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அந்நாட்டு உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளவும் விஸ்தரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் விவகாரம் குறித்து சுவிட்சர்லாந்துடன் இலங்கை உடன்படிக்கைகளையும் கைச்சாத்திட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து அமைச்சர் சமரவீர தெளிவுபடுத்தியுள்ளார்.
Post a Comment