சூபி முஸ்லிம் பிரிவு, இந்திய அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை
'மதக் கலவரங்களை ஒடுக்க, எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி, மக்களிடம் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்' என, 'சூபி' எனப்படும் முஸ்லிம் பிரிவு வலியுறுத்தி உள்ளது.
டில்லியில் நேற்று, (19) சர்வதேச, சூபி மாநாடு நடந்தது. இதில், ஏ.ஐ.யு.எம்.பி., எனப்படும், அகில இந்திய உலமா மற்றும் மஷாய்க் வாரிய தலைவர் சையது முகம்மது அஷ்ரப் பங்கேற்று பேசியதாவது:
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் மதக்கலவரங்களால், முஸ்லிம்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இந்த அச்சத்தை போக்கும் வகையில், மதக்கலவரங்களை ஒடுக்க, எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். சூபியிசக் கருத்துக்களுக்கு மாறாக, பயங்கரவாத கொள்கைகள் வலுப்பெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வகுப்பு வாதங்களை, சூபியிசம் எதிர்க்கிறது. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு, வகுப்புவாதம், அச்சுறுத்தலாக உள்ளது. சூபியிசத்துக்கு புத்துயிர் அளிக்க, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முழு ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அஷ்ரப் பேசினார்.
Sufism is the Islam not different sect
ReplyDeleteSufism is a shirk!
ReplyDelete