Header Ads



மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு உதவுமாறு அழைப்பு

-அஷ்ரப் ஏ சமத்-

அமேரிக்காவில் 3000 புற்று  நோயாளிக்கு ஒரு ஸ்கெனா் சீ.டி பெட் மெசின், இந்தியால் 1 மில்லியன் மக்களுக்காக  ஒரு மெசின் ஆனால் இலங்கையில் ஒரு நாளைக்கே  2000 போ் புற்று நோயுக்கு ஆளாகின்றனா்.  ஒரு நாளைக்கு மகரகம  புற்று நோய்  வைத்தியசாலையில் 2000ஆயிரம் புற்று நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு வருகை தருவதாக வைத்திய பணிப்பாளா் தெரிவித்தாா் ..  இதுவரை மகரகம வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டு  60 வருடங்கள் ஆகியும் இதுவரை ஒரு புற்று  நோயாளியை எளிதில் பரிசிலிக்கக் கூடிய ஒரு  பெட் -சீடி-ஸ்கனோ் மெசின்  ஒன்று இல்லாமல் மகரகம வைத்தியசாலை  உள்ளது.  

இப் பரிசோதனைக்காக   கொழும்பில் தணியாா் வைத்தியாசலையில்  ஒரு பெட் ஸ்கனோ் பரீட்ச்சையை செய்வதற்கு 1 இலட்சத்து 50ஆயிரம் ருபாவைச் செலுத்தல் வேண்டும். ஒரு வருடத்திற்கு 4 தரமாவது இந்தப்  பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது. அந்த இடங்களை கண்டுபிடித்தே அந்த பாதிக்கபட்ட இடங்களுக்கு மறுந்து ஊசி முறை மற்றும்  சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. 

ஒரு   சாதாரண ஏழை எளிய புற்று நோயாளிக்கு இது சாத்தியமாகுமா ?

தனது 17 வயது உடைய மகனை அழைத்துக் கொண்டு மகரகம வைத்தியசாலைக்குச் சென்ற  கதிஜா பவுண்டேசன் ஸ்தாபகத் தலைவா் கலாநிதி எம்.எஸ்.எச் முஹம்மதிடம் இந்த மெசினை பெறுவதற்காக  20 கோடி ருபா சேகரித்து இந்த ஸ்கனோ் மெசின் பெறுவதற்காக யாராவது முன் வருவாா்களா ?  என வினவினாா் வைத்திய பணிப்பாளா் .  தனது மகனுக்காக இந்த கைங்கரியத்தில் தான்  இறங்கி முயற்சி செய்வதாக  முஹம்மத் வைத்தியா்களிடம் உறுதியளித்தாா்.   . 

இத் திட்டத்தினை பாரமெடுத்த   முஹம்மத் கடந்த 6 மாத காலமாக தனது மகன் வைத்தியத்திற்காக தமது சொத்துக்களை விற்று இந்தியாவில் வைத்தியத்தில் செலவழித்த முகம்மத் இறுதியாக மகரகமவில் தனது மகனுடன் சிகிச்சை சென்றுவருவதுடன் 

 இந்த மெசினை பெறுவதற்கும் வைத்தியா்களோடு இனைந்து  செயல்பட்டும் வருகின்றாா்.   இது சம்பந்தமாக  மகரகம வைத்திய பணிப்பாளா்கள் சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளா்  மற்றும் இம் மெசின் பெறுவதற்கான கம்பணிகள் , என்பவற்றில் பல  கூட்டங்கள் ஆலோசனைகள், இது சம்பந்தமான லீப் லெட், வீடியோ டொங்கிமன்ட், ஊடக விளம்பரங்கள் என்பனவும்  முஹம்மத் தயாா் படுத்தினாா். அத்துடன்  மற்றும் மகரகம வைத்தியசாலையிலேயே கணக்காளரின் அனுமதியுடன்  இலங்கை வங்கியின் கணக்கொன்றையும்  ஆரம்பித்துள்ளனா்.. 

மேற்படி ஆரம்ப நிகழ்வு நேற்று மாா்ச் (4)ஆம் திகதி   முகம்மத் தலைமையில் பண்டாரநாய்க்க ஞாபகாா்த் மண்டபத்தில் கமிட்டி அரை பீயில் இதற்கான ஆரம்ப வைபவமும் ஆரம்பித்து வைக்கப் பட்டது. இந் நிகழ்வில்  தமிழ் ஹிந்து, இஸ்லம், கிரிஸ்ததுவ மதத் தலைவா்கள் இந்த நல்லதொரு விடயத்திற்காகவும் மணிதபிமான மனிதனின்  நோய்க்கு உதபுவனுக்கு இவ் உலகிலும் மட்டுமல்ல மறு உலகிலும் நன்மை கிட்டும். இந்த விடயத்திற்கு இந்த நாட்டில் உள்ள மக்கள்  சாதி, மத, குல, பிரதேச வேறுபாடுகள்  இன்றி  தங்களினால் முடிந்த அளவு உதவுமாறும் இந்த திட்டத்திற்காக  தங்களையே   அர்பபணித்து உதவுமாறு பொதுவாக  வேண்டிக் கொண்டனா்.

இத்திட்டதிற்காக  சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளா் டொக்டா் மகேபால,கலந்து கொண்டு கொடையாளிகளை உதவுமாறு வேண்டிக் கொண்டாா்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள்   தலைவா்  மகெல ஜெயவா்த்தன தனது சகோதரன் 20 வருடத்திற்கு முன் புற்று  நோய்னால் பாதிக்கப்ட்டது தனது இளம் வயதில்  தனது சகோதரனை இழந்து நிற்கிறேன் சோகமாகச்  கூறினாா்.

இலங்கை ருபாவாஹினி  கூட்டுத்தாபணத்தின் ஆங்கில செய்தி வாசிக்கும் பைசால் பொன்சோ எனது உற்ற நண்பா் - இலங்கை ருபாவாஹினி கூட்டுத்தாபணத்தின் ஆங்கில செய்திவாசிப்பவா்  ரவி ஜோன் புற்று  நோயில் பாதிக்கப்பட்டு  இளம் வயதில் மரணமானதையும் ஞாபகப்படுத்தினாா்.

கதிஜா் பவுண்டேசன் தலைவா்  முஹம்மத் - உரையாற்றுகையில் - 

தனது 17 வயது மகன் புற்று  நோயினால் பாதிக்கப்பட்டாா்  அவரது சிகிச்சைக்கா நான் கடந்த ஒரு வருடமாக தனது 3  சொத்துக்களை விற்று இந்தியா போன்ற நாடுகளில் திறிந்தேன்.   இறுதியாக தனது மகனை அழைத்துக் கொண்டு கடந்த 6 மாதகாலமாக மகரகம வைத்தியாசலைக்குச் சென்ற பிறகு அவ் வைத்தியசாலையின் நிலை, மற்றும் இங்கு  சிறுவா்கள்,பெரியவா் முதியவா், படித்தவா்கள் படிக்காதவா்கள்   பெண்கள் என புற்றுனோயினால் அவதியுறும் ஆயிரக்கணக்கான மக்களை அங்கு காணக்கிடைத்தது. அங்குள்ள  வைத்தியசாலையில் 1000 பேர் மட்டுமே தங்கி நின்று வைத்தியம் பெறமுடியும்.

ஆனால் இந்த ஸ்கெனா் மெசின் விடயத்தில்   எனது கதிஜா பவுண்டேசனினால் இந் நிதியை திரட்டியாவது  தங்களது மகரகம வைத்தியசாலைக் கணக்கில் இதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கு இந்த நாட்டில் வாழும் ஒவ்வொருவரும்  ஆகக்குறைந்து 100 ருபாய் சோ்த்தாலும் 20 கோடி ருபாவை சோ்த்துவிடலாம்.  எவ்வாறாவது முன் வந்து இந்த முயற்சியில் நானும் இறங்கியுள்ளேன். இந்த திட்டத்தில்  எனது முயற்சி எனது  மகனுக்காகவும் ஒரு நல்ல  நன்மையான கைங்கரியத்திற்காக தன்னையும்  அரப்பணித்துள்ளேன் எனக் முஹம்மத்  கூறினாா்.

National Cancer Institute, Maharagama
Bank of Ceylon, Maharagama  Account No 007125069
Branch code 055 Bank code 7010 
tel :0094- 1122897377/78
website: www.fightcancer.lk  

4 comments:

  1. முஸ்லிம்கள் இதனை நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  2. ASSALAMU ALLAIKUM,

    BANK OF CEYLONE ACCOUNT NUM: 71275069

    Please check below link of Kadijah Foundation.
    http://www.fightcancer.lk/how_to_donate.html

    ReplyDelete
  3. Inshaa Allah will be success soon, we will start in Saudi- Yanbu also

    ReplyDelete
  4. Dear Brothers,
    please update any person contact number initially we will send some amount after confirmed we will do our best with all are brothers who are living in Yanbu-KSA.
    Jasakallah

    ReplyDelete

Powered by Blogger.