Header Ads



"ஹக்கீமின் திறமையும், போராளிகளின் தியாகமும்"

-ASHEIKH S.L.M.IMTHIYAZ-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) என்பது முஸ்லிம் மக்களின் முதன்மை, முன்னிலைக் கட்சி என்பதற்கு அப்பால் ஒவ்வொரு தனிமனிதன் மனதிலும் எனது கட்சி என்ற உயர் உரிமை, உயர் நாமம் பெற்ற சக்தி மிக்க கட்சி. காரணம் மாமனிதர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் அவ்வாறான சிந்தனையை மக்கள் மனங்களில் ஊட்டினார். பல உரிமைகளை குறிப்பிட்ட காலதிற்குள்ளால் வென்றெடுத்து, பல சாதனைகளைப் புரிந்து குறிப்பாக  கிழக்கு வாழ் மக்களின் முடி சூடா மன்னனாக திகழ்ந்தார். ஷஹீத் ஆனார்.

எனினும் SLMC க்கு கிடைத்த மக்கள் ஆணையின் விளைவால் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கியதை  நன்குணர்ந்த பேரினவாத ஆட்சியாளர்கள் அதன் வளர்ச்சிக்கும் அபிலாசைகளுக்கும் மிகப்பெரும் தடைக்கற்களாக மாறினர். மாத்திரமல்ல அதன் தலைமை பொறுப்பை ஏற்ற RAUFF HAKEEM அவர்களின் மானத்திற்க்கும் கலங்கம் விளைவித்தனர். உயர்பீட உறுப்பினர்கள் பலர் அற்ப இலாபத்திற்காக சோரம் போயினர். எனினும் உண்மைப் போராளிகளை அவர்களால் அசைக்க முடியவில்லை. உண்மையில்  RAUFF HAKEEM என்ற தனிமனிதனின் திறமையினாலும் , அடிப்படைப் போராளிகளின் தியாகத்தினாலும் கடந்த 16 வருட காலமாக கட்சி பாதுகாக்கப்பட்டு இன்று தலைநிமிர்ந்து வீரநடை போடுகின்றது. ஆலவிருட்சமாக வியாபித்துள்ளது.

மிகுந்த கவலைக்குரிய விடயம் என்னவெனில் இந்த கட்சி எந்த அடிப்படை நோக்கத்திற்காக தோற்றுவிற்கப்பட்டதோ அந்த உயரிய நோக்கத்தின் ஆரம்ப கட்டத்தை கூட இன்னும் அடைய வில்லை என்பதனை அண்மைக்கால செல்நெறிகள் தத்ரூபமாக நிருபிகின்றன. அன்று பௌசி போன்ற பல முஸ்லிம் MP க்கள் சுதந்திரக் கட்சில் இருந்தும் சந்திரிகா – அஷ்ரப் அரசியல் உறவு எவ்வாறு உறுதியாக காணப்பட்டதோ அதே நிலை அல்லது அதனை விட பன்மடங்கு இந்த நல்லாட்சி அரசில் ரணில்- ரஊப் ஹக்கீம் உறவு சிறப்பாக அமையப்பெற்றுள்ளது.

எனினும் எமது கட்சியான SLMC தொடர்ந்தும் மக்களை ஏமாற்றும் கைங்கரியத்தை மிகக்கட்சிதமாக செய்து வருகின்றது என்பதனை அதன் ஆதரவாளர்கள் போராளிகளே சான்று பகர்வர். வாக்கு வங்கிகளை உயர்த்துவதற்காக வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு இன்று மக்களை ஏமாற்றும் முனாபிக்தனமான அரசியலை செய்து வருகின்றனர்.

குறிப்பாக கட்சின் உட்பூசலைக்கூட தமக்கிடையே பேசி நியாயமான தீர்வினை  முன்வைக்க திராணியற்ற தலைவர்....., எவ்வாறு முஸ்லிம் மக்களின் நீண்ட நாள் பிரட்சினைகளுக்கு தீர்வினை முன்வைக்கப்போகின்றார்?????? வடபுல முஸ்லிம்களின் வதிவிட வசதியை பெற்றுத்தரப் போகின்றார்.?????? ஒலுவில் துறைமுக கட்டுமாணப்பணியால் தமது காணிகளை இழந்தவர்களுக்கு இழப்பீடுகளைப் பெற்றுத்தரப் போகின்றார்????? வாக்குறுதி அளித்தவாறு சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சிசபையினை  பெற்றுத்தரப் போகின்றார்.??????

போதாற்குறைக்கு கட்சி உட்பூசல், குள்ளனரிக்கூட்டங்கள் , குறுநிலமன்னர்கள்    தலைமைக்கு சவால் ,  என்று தன்மீது மக்கள் அனுதாவப்படவேண்டும் என்ற நோக்கில் தகாத வார்த்தைகளால் தேசிய மாநாட்டில் தலைவர் பேசியமை கட்சியின் வன்குரோத்துதன்மையிக்கு சான்று பகர்க்கின்றது. அவை உயர்பீட கூட்டத்தின் போது பேசப்பட்டிருக்கி வேண்டும். தேசிய மாநாட்டில் எதிர் காலத் திட்டங்களை வரிசைப்படுத்தி சொல்லி இருக்க வேண்டும். நாங்கள் நிச்சயம் துஆ செய்திருப்போம்.

உண்மையில் SLMC அதன் இலக்கில் பயணிக்க தவறி விட்டது . தலைமையின் இருப்பை தக்க வைக்க கட்சின்  உயர்பீட உறுப்பினர்களின் தீர்மானமின்றி ஆரம்ப போராளியான, கட்சியின் இருப்பை தக்கவைக்க பெருதும் பங்களிப்பை வழங்கிய செயலாளர் நாயகம் M.T. ஹசனலியின் பதவியை முற்று முழுதாக குறைத்தமை யாரின் நலனுக்காக??  சமூகத்தின் நலனுக்காக அல்ல. நிச்சயம் தலைவரின் தனிப்பட்ட நலனுக்காகத்தான் இருக்கும். தேசிய மாநாட்டின் செயற்பாட்டின் போது செயலாளர் நாயகம் M.T. ஹசனலி பிரதான பங்கு வகித்திருக்க வேண்டும். எனினும் கடந்த பேளாளர் மாநாட்டில் திட்டமிட்டு அவரது பதவியை முற்று முழுதாக குறைத்தமை யாரின் நலனுக்காக?? சமூகத்தின் நலனுக்காக அல்ல. நிச்சயம் தலைவரின் தனிப்பட்ட நலனுக்காகத்தான் இருக்கும்.

நாங்கள் சமூகத்தின் குரலாக யதார்த்தத்தைச் சொல்கின்றோம். சில்லரைகட்சிகளை நாம் இங்கு பேச வரவில்லை. அவர்கள் எமக்கு தேவையும் இல்லை. எமக்குத் தேவை மாமனிதர் அஷ்ரப் வளர்த்த SLMC. எமக்குத் தேவை மாமனிதர் அஷ்ரப் வளர்த்த வியூகத்தில் பணியாற்றும் SLMC. எமக்குத் தேவை மாமனிதர் அஷ்ரப் அவர்களின் கனவை நனவாக்கும் SLMC.

SLMC என்பது RAUFF HAKEEM என்ற தனிமனிதரின் கட்சி அல்ல. அது முஸ்லிம் மக்களின் கட்சி. முஸ்லிம் மக்களின் சொத்து. அதன் முடிவுகள், தீர்மானங்கள் யாவும் யாப்பின் படி உயர்பீட உறுப்பினர்களால் எடுக்கப்பட வேண்டுமே தவிர தலைமையின் சர்வதிகாரத்தீர்மனத்தின் அடிப்படையில்  அல்ல.

கிழக்குமாகாண தனியான அலகு என்பது SLMC யின் நீண்ட நாள் குரலாக ஒலித்தது. இன்று அது 2 பிரதி அமைச்சுப்பதவி, மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் , பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கின் முதலைமைச்சர் , மாகாண அமைச்சுப்பதவி என்ற பதவிகளால் அலங்கரிக்கப்பட்டுகொண்டிருக்கின்றது. சுருங்கக் கூறின் கிழக்குமாகாண தனியான அலகுக்குரிய பதவிகள் அடையப்படு விட்டன. எமது மக்களின் அடிப்படை உரிமைகள் இன்னும் அடையப்பட வில்லை.

இன்னும் பல முஸ்லிம் குடும்பங்கள் அடிப்படை  வசதிகளற்று வாழ்ந்து வருகின்றனர். அல்லாஹ்வுக்காக இன்னும் பிரிந்து விடாதீர்கள். அடிப்படைப் போராளிகளை மறந்து விடாதீர்கள். எமது மக்களின் குரலாக SLMC என்றும் பரிணமிக்க வேண்டும், மாமனிதர் அஷ்ரப் வளர்த்த வியூகத்தில் பணியாற்ற வேண்டும், அதன் தூர இலக்கை அடைய வேண்டும். என்பதே எமது அவா.

3 comments:

  1. He is useless and divider

    ReplyDelete
  2. Who are these asheikh....it's insult to islam also...these busterds write lies for there personnel benefits...this hakeem is the one dance with ladies in a american musical show also he has so many personal negatives thats not within a good muslim . he can do whatever tgats his choice....but don't be a leader of great party....he should immediately resign...jaffna muslim don't allow to use abbreviations lije as shiek or moulavi for these third class writers.

    ReplyDelete
  3. நல்ல கருத்துகள் கட்டுரையில், உண்மையில் சிந்திக்கப்பட வேண்டியவை..,
    நீண்ட தன்னோடு இணைந்திருந்து ஆபத்து தருணங்களிலொல்லாம் தன்னோடு நம்பிக்கைக்கு பாத்திரமாக நின்று தோள் கொடுத்த உற்ற நண்பனை, உண்மை கட்சி போராளியை தருணம் பார்த்து கழுத்தருத்த செயல் வரலாற்றுக் கரையாவே இருந்துவிடப்போகின்றது

    ReplyDelete

Powered by Blogger.