மகிந்தவை பிரதமராக நியமிக்குமாறு கோரிக்கை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்க வேண்டுமாயின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக நியமிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
கொழும்பு - கெஸ்பேவ பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே குமார வெல்கம இதனை குறிப்பிட்டுள்ளார்.
அப்படியில்லை என்றால், மக்களின் நிலைப்பாடுகளுக்கு செவி கொடுத்து தனியான அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்கவும் மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக நியமிக்க வேண்டும் என நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டையும் மக்களையும் பாதுகாக்க வேண்டுமாயின் உங்கள் கூட்டு எதிர்க்கட்சி கூழங்கள் களையெடுக்கப் பட வேண்டும்.
ReplyDeleteWe dont want the Party, We ant Country and peace.
ReplyDelete