மடலஸ்ஸ - தொரணகெதர மக்களுக்கு சுத்தமான குடிநீர்
நகர திட்டமிடல் நீர் வழங்கல் வடிகாலமைபு அமைச்சின் தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் இணைப்பதிகாரி வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷாவின் முயற்சியினால் 5 கோடி ரூபா செலவில் குளியாப்பிட்டிய தேர்தல் தொகுதியிலுள்ள மடலஸ்ஸ தொரணகெதர பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு சுத்தமான குடி நீர் வழங்குவதற்கான திட்டம் 08-03-2016 ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ராபி தலைமையில் நடைபெற்ற இந்நகிழ்வில் நகர திட்டமிடல் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் குருநாகல் மாவட்ட இணைப்பதிகாரி ஏ. எஸ். எம். சாம் கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இதில் பல்லேவல விஹாராதிபதி, குளியாப்பிட்டிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் இல்ஹாம் சத்தார் உள்ளிட்ட பல கலந்து கொண்டதை இங்கு காணலாம்.
இக்பால் அலி
Post a Comment