Header Ads



வசிம் தாஜூடின் கொலையாளிகள், இதுவரையில் கைது செய்யப்படாதது ஏன்..?

கடந்த அரசாங்கத்தின் சில உறுப்பினர்களுடன் இந்த அரசாங்கம் உடன்பாடுகளை வைத்துக் கொண்டுள்ளதாக ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுடன் அரசாங்கம் இரகசிய இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சஜின் வாஸ் குணவர்தனவிற்கு எதிராக பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. எனினும் அரசியல் இணக்கப்பாடுகளின் அடிப்படையில் சஜின் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அரசாங்கத்தினால் சஜினுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் அரசியல்வாதிகளுடன் இந்த அரசாங்கம் பேணி வரும் இரகசிய அரசியல் இணப்பாடுகள் குறித்து ஜே.வி.பி தொடர்ந்தும் குரல் கொடுக்கும்.

கடந்த அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்படும் வரையில் ஜே.வி.பி போராட்டங்களை கைவிடாது.

ரகர் வீரர் வசிம் தாஜூடின் கொலை தொடர்பான சந்தேக நபர்கள் உள்ளிட்ட பலரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Suspects are not arrested due to political deal. They will regret for that later......

    ReplyDelete
  2. This is Yahapalana Law. Ordinary people are excerpted.

    ReplyDelete

Powered by Blogger.