கண்டி வீதியை மூடியிருக்கும், முட்டாள் பௌத்தர்கள்
Ravaya (Charles Dayananda) in Tamil (ARM INAS)
கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் உள்ள பாதை மூட்பட்டிருப்பதானது கண்டி நகர மக்களின் பிரச்சினை மட்டுமல்லாது முழு நாட்டு மக்களின் பிரச்சினையாக உருவெடுத்துவருகிறது. கண்டி வாழ் மக்களுக்கு மட்டுமல்லாமல் கண்டிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இந்தப் பிரச்சினையால் பாரியளவில் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான முக்கிய காரணம் கடந்த சில ஆண்டுகளாக கண்டி நகரம் பாரிய வாகன நெரிசல் கொண்டதொரு நகராக மாறியிருக்கின்றமை. கொழும்பை விட அதிக வாகனநெரிசல் கண்டியில் இருப்பதாக தினம் அங்கு பயணிக்கும் எங்களாலும் காண முடிகிறது.
இவ்வாகனநெரிசலுக்கு பிரதான காரணி கண்டி குளத்தை சுற்றி காலையும் மாலையும் அசையாமல் வாகனநெரிசலில் நிற்கும் வாகனங்கள். காலையில் பாடசாலைக்கு மற்றும் காரியாலயங்களுக்கு செல்லும் மற்றும் மாலையில் வீடு செல்லும் பஸ் வண்டிகளும், வாகனங்களும் குளத்தை சுற்றி ஏற்படும் வாகன நெரிசல். காரியாலயங்கள் மற்றும் வேலைத்தளங்களுக்கு வேலை நிமித்தம் செல்வோர் குறைந்தது 1 மணித்தியாலம் தாமதித்தே அவர்களின் இடங்களுக்கு சென்றடைகின்றனர். இதனால் வீணாகும் மனித நேரத்தை கணிப்பிட்டால் இதனால் பாரிய இழப்பு இருப்பதனை எம்மால் கண்டுகொள்ள முடியும்.
குளத்தை சுற்றி ஏற்படும் வாகனநெரிசல் ரஜின வீதியால் மணிக்கூட்டு கோபுரம் வரை நீண்டு நிற்கிறது. இதன் காரணமாக கொழும்பு கண்டி வீதி உட்பட அநுராதபுர A9 பாதையும் பாரிய வாகனநெரிசலுக்கு உட்படுகிறது. ஒரேயொரு பாதை மூடப்பட்டதன் காரணமாக கண்டி நகரம் முழுதும் பல கிலோமீற்றர் தூரத்துக்கு வாகனங்கள் வாகனநெரிசலில் சிக்கி வாகனங்கள் தினமும் நீண்ட வரிசையாக பாதைநடுவில் இருப்பதனை தின மும் காணக் கூடியதாக இருக்கிறது .
குளத்தை சுற்றியிருக்கும் பாதையுடன் தளதா மாளிகைக்கு அண்மையில் உள்ள பிரதான வீதியை திறந்து அவ்வழியே வாகனப் போக்குவரத்துக்கு இடமளித்தால் இப்பாரிய வாகன நெரிசலை முழுமையாக இல்லாமல் செய்யலாம் என்பது எமது எண்ணமும் அனுபவமுமாகும். ஆனாலும் யார் என்ன சொன்ன, செய்த போதும் அதனை திறப்பதாக இல்லை.
இவ்வாகன நெரிசலால் இன்று கண்டி நகரம் இலங்கையிலேயே அதிகம் வளி மாசடைந்த நகரமாக மாறியிருப்பதாக பல ஆய்வுகள் சொல்கின்றன. இதன் காரணமாக கண்டியில் சுவாசம் மற்றும் இதயக் கோளாறுகள் தொடர்பான நோய்கள் அதிகரித்துருப்பதாகவும் வைத்தியர்கள் ஆதாரபூர்வமாக நிறுவிக்காட்டியுள்ளனர். முக்கியமாக கண்டி நகரின 8 பாடசாலைகளில் 30,000க்கும் அதிகமான மாணவர்கள் இந்த நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தொகை எதிர்காலத்தில் இதனை விட அதிகரிப்பதற்கான அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான மிக ஆபத்தானதொரு பிரச்சினை மக்களுக்கு ஏற்பட்டுள்ள போதும் இந்த பாதையை ஏன் திறப்பதாக இல்லை? இதற்கு எந்த நியாயமான காரணமும் இல்லை. மதநம்பிக்கை, பின்பற்றுதல் மற்றும் மடத்தனத்தால் செய்யும் வேலையாகவே இதனை நாம் பார்க்க வேண்டியுள்ளது. தளதா மாளிகை வீதியை திறப்பது தளதா கடவுளை அவமதிப்பதாக அமையும் என்பது சில முட்டாள் பௌத்தர்களின் கருத்தாகும். சென்ற வாரம் தளதா மாளிகை வீதியை திறக்கும் படி கோரி நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு எதிராக ஓர் எதிர் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது. இவ்வார்ப்பாட்டத்தை தொடர்ந்து இவர்கள் ஒரு ஊடக சந்திப்பையும் நடாத்தினர் அதன் போது கருத்து தெரிவித்த ஒரு இளம் பௌத்த பிக்கு.
“தளதா மாளிகை வீதியை திறக்காமலிருக்க நான் உயிரைக் கூட விடத் தயார்” என தெரிவித்திருந்தார். தளதா கடவுளை அவமதிக்கும் நோக்கில் பௌத்த மதத்துக்கு எதிரான ஒரு குழுவே இப்பாதையை திறப்பதற்கான சதிகளில் ஈடுபடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனை ஏற்பாடு செய்திருந்தவர்கள் மிக ஆவேசமாக கடுமையாக ஊடகங்கள் முன் பேசினர். இதில் முன்னின்ற இருவரில் ஒருவர் பிக்கு மற்றவர் ஒரு இளைஞன் இருவருக்கும் சுமார் 26 வயதிருக்கும். கண்டி நகரத்தை பற்றியோ தளதா மாளிகை வீதி மூடப்பற்றிய வரலாறு தொடர்பிலோ அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதனை அவர்களின் நடத்தையிலும் பேச்சிலுமே அறிந்துகொள்ள முடிந்தது.
இப்பாதை மூடப்பட்டது புலிகள் தளதா மாளிகை மீது குண்டுத் தாக்குதல் நடாத்திய சம்பவத்தின் பின்னரே. அதற்கு முன்னர் அரசர்களின் காலத்திலிருந்து, வெள்ளைக்கார ஆட்சி, சுதநத்திரத்தின் பின்னர் கூட அப்பாதை திறந்தே இருந்தது. அன்று கரத்தைகள், குதிரை வண்டிகள் தொடக்கம் தற்காலம் வரையான வாகனங்கள் கூட 100 வருடங்களுக்கும் மேலாக தினசரி போக்குவரத்துக்காக தளதா மாளிகை வீதி பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டது.
கண்டி இராச்சியத்தின் ஆட்சி தென்னிந்திய நாயக்கர் வம்சத்தினருக்கு கிடைத்தன் பிற்பாடு அரசனின் உறவினர்கள் மலபார் தேசத்திலிருந்து இங்கு வந்து இப்பாதையின் இருமருங்கிலுமேயே குடியமர்ந்தனர்.
அக்காலத்தில் இவ்வீதி மலபார் வீதி என அழைக்கப்பட்டது. அதன் பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் இந்தப் பாதை மகியங்கனை வரை செல்லும் பிரதான பாதையாக பயன்படுத்தப்பட்டது. புலிகளின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்காகும் வரை அப்பாதை இவ்வாறே தினசரி மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டது. அப்படியான நிலையில் இப்பாதையை திறப்பது தளதா கடவுளுக்கு எந்த வகையில் அகௌரவமாக அமையும்?
இந்த வரலாறு பற்றி இம்முட்டாள்களுக்கு தெரியாது. தளதா மாளிகை மீது புலிகள் குண்டுத் தாக்குதல் நடாத்திய போது இந்த ரவுடிக் கும்பல் பிறந்திருக்கவும் வாய்ப்பில்லை. அல்லது பாலர் வகுப்பில் கல்வி கற்றுக் கொண்டிருந்திருப்பார்கள். தளதா மாளிகை தாக்கப்பட்ட அடுத்த கனமே பாதுகாப்பு தரப்பினர் இந்த பாதையை மூடினர்.
எமது பாதுகாப்பு பிரிவினர் எப்போதும் இப்படித்தான் குதிரை தப்பிச் சென்ற பின் தான் கதவை அடைப்பார்கள். ஒரு முறை அப்பாதையில் வந்து தாக்குதல் நடாத்திய புலிகள் மீண்டும் அதே பாதையில் வந்து தாக்குதல் நடாத்த அவர்கள் ஒன்றும் மடையர்கள் அல்ல. ஒரு முறை கொழும்பில் இளநீர் விற்பனை செய்யும் வண்டி ஒன்றில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததனை தொடர்ந்து பொலிஸார் இளநீர் விற்பனை செய்யும் அத்தனை வண்டிகளின் பாவணையையும் தடை செய்தனர். புலிகள் மீண்டும் அதே போன்று இளநீர் வண்டியில் குண்டு வைப்பதாக பொலிஸார் எண்ணியிருந்தனர். போலிஸாரைப் போன்று புலிகள் மடையர்கள் அல்ல. இச்சம்பவத்தை தொடர்ந்து நாட்டின் அனைத்து தென்னை மரங்களையும் வெட்டுமாறு பொலிஸார் உத்தரவிட்டிருந்தாலும் ஆச்சரியம் கொள்ளத் தேவையில்லை.
கண்டி தளதா வீதி மூடப்பட்டிருப்பதும் இப்படியானதொரு மடத்தனமான செயலே. தளதா மாளிகை மீது புலிகள் தாக்குதல் நடாத்தி 10 ஆண்டுகளையும் கடந்துவிட்டது. யுத்தம் முடிவடைந்து 5 வருடங்களும் கடந்து விட்டது. அதன் பின்னரும் இவர்கள் ஏன் அப்பாதையை மூடிவைத்திருக்கின்றனர்?
இப்பொழுது அவர்களின் அனைத்து வாதங்களும் முறியடிக்கப்பட்டுவிட்டதால் அவர்கள் முன்வைக்கும் பிரதான வாதம் பாதை திறந்தால் அது தளதா கடவுளை அகௌரவப்படுத்தும் செயல் என்பதாகும். தளதா கடவுளுக்கு அகௌரவம் ஏற்படுவது இப்போது பாதையை திறப்பதனால் மட்டுமா?
புலிகளின் தாக்குதலுக்கு முன்னர் நூறாண்டு காலமாக திறந்து வைத்திருந்த போது கடவுளுக்கு அகௌரவம் ஏற்படவில்லையா? பாதை திறப்பதால் தளதா கடவுகளுக்கு அகௌரம் ஏற்படும் என இவர்களும் கூறும் கதைகள் அனைத்தும் மிக மடத்தனமான கதைகளே.
சென்ற வாரம் ஞாயிறு பத்தரிகையொன்றில் இப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியிடம் ஒரு கேள்வி கேட்கப்படடிருந்தது. அதற்கு ஜனாதிபதி அளித்திருந்த பதில் மிகவும் ஆச்சரியத்துக்குரியதாக இருந்தது.
மகாநாயக்க ஹிமி பாதையை திறக்க விரும்பும் தினத்தில் அப்பாதை திறக்கப்படும் என ஜனாதிபதி பதிலளித்திருந்தார். இப்படியான ஒரு கூற்றை நாட்டின் தலைவர் சொல்லியிருக்கக் கூடாது. கண்டியில் இரு மகாநாயக தேரர்கள் இருக்கின்றனர். இவ்விருவரும் இருப்பது 2 கிலோமீற்றர் தூரத்துக்குள் தான். அவை 1. அஸ்கிரி பீடம் 2. மல்வது பீடங்களின் மகாநாயக்கர்கள். மல்வது பீடாதிபதி இப்பாதையை திறப்பதனை ஆதரிக்கிறார். பொதுமக்களுக்கு இது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதால் இதனை திறப்பதனை தான் ஆதரிப்பதாக மல்வது பீடாதிபதி தெரிவித்திருந்தார்.
இப்பாதையினை திறப்பதனை கடுமையாக கண்டிப்பதாக அஸ்கிரி பீடாதிபதி தெரிவித்திருந்தார். மகாநாயக்க ஹிமிகளுக்கிடையிலேயே இது தொடர்பி;ல் இரண்டு கருத்துக்களே நிலவி வருகிறது. ஜனாதிபதி கூறியது இரு மகாநாயக்க தேரர்களில் எந்த மகாநாயக்க தேரரின் கருத்தை என்பதனை புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது.
அரச தலைவரொருவர் நாட்டை ஆட்சி செய்ய வேண்டியது கண்டகண்டவர்களின் விருப்பத்திற்கேற்ப அல்ல. நீதி மற்றும் சிறந்த கொள்கைகளின் அடிப்படையிலேயே அவர் நாட்டை ஆட்சிய செய்ய வேண்டும். அவர் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டியது பொதுமக்களின் நலன்களையே. பெரும்பான்மையான மக்கள் வாக்களித்து நாட்டின் தலைவரை மக்கள் தெரிவு செய்வது மகாநாயக்கர்களின் பேச்சை கேட்கவோ அல்லது வேறு நபர்களின் பேச்சை கேட்டோ தீர்மானங்களை எடுப்பதற்காகவல்ல.
இவ்விடயத்தில் ஜனாதிபதியின் கடமை இது தொடர்பில் ஆராய இதற்காகவென்று ஒரு விசேட குழுவை அமைத்து அக்குழுவின் பரிந்துரைகளுக்கிணங்க தீர்மானம் ஒன்றினை எடுப்பதுவே. நியமிக்கப்படும் குழுவில் இரு மகாநாயக்கர்களும், பொதுமக்களின் பிரதிநிதிகள், பாதை திறப்பதனை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் தரப்பிலிருப்பவர்கள், நகரசபை, பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்கள், வைத்தியர்கள் கீழ்வரும் தரப்பினரை கொண்டே தீர்மானங்களை எட்ட வேண்டும்.
இதற்குள் மார்க்க பக்தி அல்லது கௌரவப்படுத்தல் போன்ற காரணிகள் உள்ளடங்காது. கன்னியம் சீர்குழையும் என்பதற்காக பாதைகள் மூடப்படுவதாக இருந்தால் சிறீமகாபோதி, ருவன்வலிசாயக்கு அண்மித்துள்ள மற்றும் களுத்துறை போதிக்கு அண்மைய பாதை, கடபே போதிக்கு அண்மிய அனைத்துப் பாதைககளையும் மூட வேண்டியிருக்கும். ஆனாலும் இந்தப் பாதைகளை மூட இந்த ஈனியா பௌத்தர்களும் பிக்குகளும் விரும்பாததற்கான காரணம் அவ்விகாரைகளின் உண்டியல்கள் அந்தப் பாதையால் செல்பவர்களின் பண்த்தால் நிரம்புவதால்தான். பேராதெனியவின் வாகனநெரிசலை குறைக்க கன்னொருவ பாதையை 4 சுவடுகள் கொண்ட பாதையாக மாற்றி வாகன போக்குவரத்துக்கு வழி சமைத்த நேரம் இப்பௌத்தர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடம்பே விகாரைக்கு அண்மையால் வாகனங்கள் செல்ல வேண்டும் என அவர்கள் கூறினார்கள். விகாரைக்கு கிடைக்கு பணம் கிடைக்காமல் போகும் என்பதால் வாகன நெரிசலுடனேயே வாகனங்கள் செல்ல அனுமதிக்குமாறு அவர்கள் கூறினார்கள். இவர்களின் இரட்டை முகம் இதன் மூலம் தெரியவருகின்றது.
இப்பிரச்சினைக்கு முழுக் காரணம் இனவாதமும் குறுகிய அரசியல் இலாபங்களுமே என்பது தெளிவாக தெரிகிறது. இனவாதிகளுக்கு இப்போது குளிர்காய எந்த கோஷங்களுமில்லையென்பதால் மக்களின் மார்க்க பக்தியை தவறாக பயன்படுத்தி அதனை இனவாதப் பிரச்சினையாக மாற்ற முயற்சிக்கின்றனர். ஊடக சந்திப்புகளை நடாத்துவது, சிறியளவில் ஆர்ப்பாட்டங்கள் நடாத்துவது, மக்களின் இனவாதத்தை இனவாதிகளின் பிரதான வழிமுறைகளாக அமைந்திருக்கின்றன. அந்த வகையில் ஏதாவதொரு பிரச்சினையை தூக்கிப்பிடித்து அதனை இனவாதப் பிரச்சினையாக மாற்றி அதன் மூலம் தமது அரசியல் பலத்தை நிலைநாட்டிக்கொள்ள இனவாதிகள் முயற்சிக்கின்றனர். இப்பாதையை திறக்க முயற்சிப்பவர்கள் பௌத்த மதத்துக்கு எதிரான அந்நிய மத சக்திகள் என இனவாதிகள் குற்றம்சாட்டுகின்றனர். இவ்விசமப் பிரச்சாரம் மூலம் நடுநிலை பௌத்தர்களை இனவாதிகளின் பக்கத்துக்கு ஈர்துக்கொள்ளாலாம் என எண்ணுகின்றனர்.
இந்த பௌத்த இனவாதிகள் மிகவும் பிற்போக்கான எண்ணமுடையவர்கள். கண்டி நகரில் அனைத்து அபிவிருத்தி வேலைகளுக்கும் இவர்கள் தான் முட்டுக்கட்டையாக நிற்கின்றனர். புராதன பழமை வாய்ந்த சொத்துக்களை அழிப்பாதாக சப்தமிடுகின்றனர். இலங்கையின் இரண்டாவது மிகப் பெரிய கடைத்தொகுதியான கண்டி சிட்டி சென்டரின் கட்டிடத்தை அமைப்பதற்கு கூட இவர்கள் எதிராக நின்றனர். ஆர்ப்பாட்டத்துக்கு, கருப்பு கொடிக்கும் இவர்களிடம் பஞ்சமே இல்லை. இவர்களின் எதிர்ப்பால் அக்கட்டிடத்தை கட்டி முடிக்க பல வருடங்கள் ஆனது. இவர்கள் சொல்வதெல்லாம் நகரை மன்னரின் காலத்தை போன்றே பழமையாக வைக்குமாறு. அவை புராதன பௌத்த சொத்துக்கள் என அவர்கள் கருதுகின்றனர். இது இனவாதம் தவிர வேறொன்னுமில்லை. எதிர்வரும் நாட்களில் ஒன்றிணைந்த எதிர்கட்சி இந்தப் பிரச்சினைக்கு நிச்சயம் தலையிட வரும். இவர்களும் இந்தப் பிரச்சினையை காரணம் காட்டி தமது தரப்பை பலப்படுத்திக் கொளள் முற்படுவார்கள்.
சிட்டி சென்டர் நிறுவனத்தின் உயர் மாடிகளை அமைக்கும் போது இனவாதிகள் அதனை நிறுத்தினர். தளதா மாளிகையை விட உயரத்தில் கட்டிடம் அமைத்தால் அது கடவுளின் கண்ணியத்தை பாதிக்கும் என்பதனை காரணம் காட்டியே இனவாதிகள் அவ்வாறு செய்தனர். அப்படிப் பார்த்தால் பகிரவ மலை, வேல்ஸ் பாக் மலையில் அமைந்துள்ள அனைத்துக் கட்டிடங்களும் உடைக்கப்பட வேண்டும்.
அப்பாவி நடுநிலை பௌத்தர்கள் இந்த இனவாத பௌத்தர்களின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்காது தடுக்க வேண்டும். அரசு உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு இதனை ஆராய ஒரு குழுவை நியமித்து ராஜதந்திரரீதியான, கொள்கைரீதியான ஒரு தீர்மானத்துக்கு உடன் வரவேண்டும். மகாநாயக்கர்களின் தீர்மானங்களை அடிப்படையாக வைத்து அரசை நடாத்தி செல்லும் இந்த வழிமுறை மாற்றப்பட வேண்டும். தேர்ததலில் கிடைக்கும் வாக்குகளை பற்றி மட்டும் சிந்தித்து தீர்மானங்களை மேற்கொள்ளாமல் நாட்டு மக்கள் பற்றி சிந்தித்து,அவர்களின் தேவையை முற்படுத்தி முடிவுகளை அரசு எடுக்க வேண்டும்.

தலைப்பு அவ்வளவு நாகரீகமாக இல்லை.
ReplyDeleteஅதுதானே
DeleteMinister lakshman kiriella.pls consider tis matter by serious.god buddha bless you
ReplyDeletechange the heading first.
ReplyDeleteதலைப்பு நாகரீகமாக இல்லை. பௌத்தர்கள் என்பது ஒருவர் இருவர் அல்ல. எல்லோரையும் குறிப்பிடும். கருத்துச் சுதந்திரத்திற்காக ஒரு இனத்தவரை முட்டாள்கள் என்பது ஒழுக்கவீனம். jaffna muslim இந்த விடயத்தில் பாராமுகமாக இருப்பது நல்லதல்ல.
Original article ib sinhala,this is only a translation including title.
ReplyDeleteஇது ராவய பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு
ReplyDeleteராவய இட்ட அதே தலைப்பு தான் இங்கு தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது
என்பதனை வாசகர்கள் கவனத்தில் கொள்ளவும்
respect each other first,then write your idia.
ReplyDeleteவீதியை திறக்குமாறு ஆர்ப்பாட்டம் செய்தவர்களும் பெளத்தர்களே! தலைப்பு மிகவும் அநாகரீகமானது. மொழிமாற்றம் செய்யப்பட்டதெனின் அது தெளிவாக குறிப்பிடப்படல் வேண்டும். (eg கண்டி வீதியை மூடியிருக்கும்,..... பெளத்தர்கள்-ராவய பத்திரிகை சுட்டிக்காட்டு!) அடுத்து கண்ணியமான முறையில் தலைப்பிடுவதில் ஏதும் குறைகள் வந்து விடுமா என்ன.....
ReplyDelete