பொதுபல சேனாவுக்கு செவிசாய்த்த மைத்திரி - மத வங்கிகள் பற்றி, விசாரணைக்கு உத்தரவு
மத அடிப்படையில் வங்கிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
மத அடிப்படையில் வங்கிகள் உருவாக்கப்பட்டுள்ளனவா இல்லையா என்பது குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் செயலாளர் எம்.ஐ.எம். ராபிகிற்கு ஜனாதிபதி செயலகம் கடிதமொன்றை வழக்கியுள்ளது.
ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ்.டி. கொடிகாரவினால் கடந்த 1ம் திகதி இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மதவாத அடிப்படையில் வங்கிகள் செயற்பட்டு வருவதாகவும் இதனால் மதப் பிரிவினைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பொதுபல சேனா அமைப்பு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விடயம் குறித்து விசாரணை நடாத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் அடிப்படையில் இலங்கையில் மதவாத அடிப்படையில் வங்கிகள் செயற்படுகின்றனவா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையால் முஸ்லிம்களுக்கு நன்மைதான் கிட்டும் என்பத மறந்து விட வேண்டாம் அமான என்று சொல்லி கொண்டு வட்டிக்கு மேல் வட்டி அறவிடும் நிறுவனங்களில் இருந்து பாது காப்பு கிடைக்கும்
ReplyDeleteமுஸ்லிம்கள் வட்டியோடோ தொடர்பு பாடாத ஏனைய நிறுவனங்களில் பnaமாகவோ சொத்தாகவோ முதலிடம் இல்லையா
ஏனைய நாடுகளில் உள்ள முஸ்லிம் வங்கிகளில் வைப்பும் செய்யலாம் அதனால் இலங்கையின் பண வீக்கம் நன்றாக பொது பல சேன புரிந்து கொள்ளும்
பொருளாதார கொள்கை அடிப்படையிலேயே வங்கிகள் தோற்றம் பெறுகின்றன. மதம் வணிகப் பெறுமதி அற்றது. அதைக் கொண்டு வியாபாரம் செய்ய முடியாது.
ReplyDeleteமதம் என்பது ஆன்மீகம் சார்ந்தது.
சமத்துவமற்ற பொருளாதார தேக்க நிலைக்கு தீர்வாக அனைத்து உலகமும் ஏற்றுக்கொண்ட கொள்கை வட்டியில்லா பொருளாதாரக் கொள்கை. அதனை மதத்துடன் இனைத்துப் பேசுவது தேரரின் வங்குரோத்து நிலை. மடமையின் வெளிப்பாடு.