Header Ads



ரிஸானாவின் பெற்றோர் மறுத்த பணம், வேறு தேவைக்கு பயன்பட்டது (வாக்குமூலமும்/சாட்சிகளும்)


-மூத்த ஊடகவியலாளர்  Thaha Muzammil-

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 20 ஆண்டு நிறைவு விழா சம்பந்தமாக இன்று -07- சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு , புனர்வாழ்வு, மீள்குடியமர்வு மற்றும் இந்து மத அலுவல்கள் ராஜாங்க அமைச்சர் ஹிபுல்லாஹ்வை சந்திக்க சென்றிருந்த வேலை, அங்கு வருகைத் தந்திருந்த சவுதியைச் சேர்ந்த யஹ்யா பின் அப்துல் அஸிஸ் அல்-ரஷீத் அவர்களுக்கு அமைச்சர் எம்மை அறிமுகம் செய்து வைத்தார்.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிஸானா நஃபீக்கின் பெற்றோர்களுக்காக வீடொன்றைக் கட்டித் தருவதற்கு முன்வந்தவர் யஹ்யா பின் அப்துல் அஸிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உதவியை ரிஸானாவின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததினால், அப்பணத்தை, இறைவனின் பொருத்தம் நாடி, அது போன்ற மற்றுமொரு சேவைத் திட்டத்தில் பயன் படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

படத்தில் இ.வ. அமைச்சர் ஹிபுல்லாஹ், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன், யஹ்யா பின் அப்துல் அஸிஸ் அல்-ரஷீத், முஸ்லிம் மீடியா போரத்தின் உப தலைவர்களான எம்.ஏ.எம்.நிலாம் மற்றும் தாஹா முஸம்மில்.

No comments

Powered by Blogger.