ரணில் வருத்தம்
நாடு முழுவதிலும் ஏற்பட்ட மின்சாரத் தடை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறுவதனை தடுக்க தீவிர கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்சாரத் தடை ஏற்பட்டமை குறித்து அலரி மாளிகையில் இன்றைய தினம் விசேட உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் ஏற்பட்ட நிலைமை குறித்து ஜனாதிபதி மற்றும் மின்வலு அமைச்சருடன் கலந்துரையாடியதாகத் தெரிவித்துள்ளார்.
Post a Comment