"தமிழ் அரசியல்வாதிகளின் தேவைகளையே, இந்த அரசாங்கம் பூர்த்தி செய்கிறது"
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருவரும் நாடகமாடி மக்களை ஏமாற்றுகின்றனர் என பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.
தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம், இன்று -07-கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
உண்மையில் தாம் இந்த அரசாங்கத்தை எதிர்ப்பதோடு, நல்லாட்சி எனக் கூறப்படும் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்று பிரசன்ன ரணதுங்க கூறினார் இந்த அரசாங்கத்தை 2 வருடங்களில் கவிழ்க்க வேண்டுமென்று அந்த நிலைப்பாட்டில் தான் தானும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்போது எதற்காக இந்த அரசியலமைப்பு? இது தேவைதானா? என கேள்வியெழுப்பியுள்ளதோடு, தற்போது ஆட்சியில் இருக்கும் இந்த அரசாங்கம், தமிழ் அரசியல்வாதிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதாக தேரர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாராளுமன்றில் இருக்கின்ற 225 உறுப்பினர்களுடைய விருப்பங்களையும், புதிய அரசியலமைப்பிற்காக பலவந்தமாக பெற்றுக்கொள்வதில் இறங்கியுள்ளதாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, கூட்டு எதிர்க்கட்சி இதற்கு ஒருபோதும் ஆதரவளிக்க வேண்டாமென பெங்கமுவே நாலக தேரர் கேட்டுள்ளார்.
அத்துடன், வடக்கில் புதிய ஆளுநரை நியமித்து இருப்பதற்கான காரணம், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவேயாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், நல்லாட்சி எனப்படும் இந்த அரசாங்கம் பாதாள உலக கோஷ்டியினருக்கு ஆதரவு வழங்குகின்றமை தமக்கு தெரியும் எனவும் பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழர்களுக்கே அதிக தேவை உணரப்படுகிறது. அவற்றை நிவர்த்திப்பது அரசின் கடமை.
ReplyDelete