"பௌத்த பிக்குகளுக்கு நெருக்கடி கொடுத்தால், புதிய அரசாங்கம் கவிழ்க்கப்படும்"
பௌத்த பிக்குகளுக்கு நெருக்கடி கொடுத்தால் புதிய அரசாங்கம் கவிழ்க்கப்படும் என பெவிதி ஹன்ட அமைப்பைச் சேர்ந்த முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை ஆட்சி பீடம் ஏற்றுவதும் அதனை கவிழ்ப்பதுவும் பௌத்த பிக்குகள் என குறிப்பிட்டுள்ள அவர் முறைமையில் மாற்றம்கொண்டு வரப்பட வேண்டுமென மாதுலுவே சோபித தேரர் முயற்சித்த போதிலும் அவரது எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளைக்காரர்கள் ஆட்சிக் காலத்தில் கூட இவ்வாறு பௌத்த பிக்குகள் கைது செய்யப்படவில்லை எனவும் பௌத்த மதத்திற்கு இழிவு ஏற்படும் வகையில் அரசாங்கம்செயற்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடு நாளுக்கு நாள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
Post a Comment