"முஸ்லிம் ஊடகவியலாளர்களை, ஹராத்தில் தள்ளிவிட முயற்சிப்பதற்கு கண்டனம்"
தீர்வையற்ற மோட்டார் சைக்கிள் வழங்கப்படும் என கூறப்பட்டு ஊடகவியலாளர்கள் மிக மோசமாக ஏமாற்றப்பட்டுள்ளதுடன் ஹராமான வட்டி செலுத்துவதனூடாக அதனை பெறலாம் என அரசாங்கம் சொல்pயுள்ளமை முஸ்லிம் ஊடகவியலாளர்களை அவமானப்படுத்துவதாகும் என உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஊடகவியலாளர்களுக்கு தீர்வையற்ற மோட்டார் சைக்கிள் வழங்கப்படவுள்ளதாக கடந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தார். பல அரச உத்தியோகஸ்தர்களுக்கு இவ்வாறான மோட்டார் கைச்கிள்களை வழங்கி வைத்த மஹிந்த ராஜபக்ஸ ஊடகவியலாளர்களுக்கும் வழங்கவிருந்த நிலையில் தோல்வியுற்றார். அவரது தோல்விக்கு முஸ்லிம் ஊடகவியலாளர்களில் பலர் நல்லாட்சிக்கு ஆதரவளித்ததும் பிரதான காரணமாகும்.
பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் மஹிந்த செய்தது போல் தாமும் செய்வோம் என்பது போல் தீர்வையற்ற மோட்ட சைக்கிள் வழங்கப்படும் என கூறியே ஊடகவியலாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரியது. அதற்கான நேர்முக பரீட்சையில் யாழ்ப்பாணம் முதல் கல்முனை மாவட்டம் வரையிலான ஊடகவியலாளர்கள் தமது சொந்த பணத்தை செலவு செய்து மூன்று நாட்கள் கொழும்புக்கு அலைந்து கலந்து கொண்டனர்.
தற்போது தீர்வையற்ற மோட்ட சைக்கிள் என்றில்லாமல் வட்டியுடனான கடனுக்கு மோட்ட சைக்கிள்களே வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளமை மூலம் ஊடகவியலாளர்கள் மோசமாக ஏமாற்றப்பட்டுள்ளதையும் என்ன இருந்தாலும் மஹிந்த வந்திருந்தால் இதனை கட்டாயம் வழங்கியிருப்பார் என்ற கருததாடல்களையும் ஏற்படுத்தியுள்ளது. சொன்னதை செய்பவராக மஹிந்த ராஜபக்ஷ இருந்துள்ளார் என்பதை நடுநிலை ஊடகவியலாளர்கள் அறிந்து வைத்துள்ளனர்.
அத்துடன் இவ்வாறு வட்டிக்கு கடனாக மோட்ட சைக்கிள் பெறுவதன் மூலம் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் சமயத்தால் தடைசெய்யப்பட்ட ஒன்றுக்குள் இழுத்து விடப்பட்டுள்ளார்கள். கடந்த மஹிந்த அரசில் ஹலால் நீக்கப்பட்டது போல் இந்த அரசு ஹராத்தில் முஸ்லிம் ஊடகவியலாளர்களை தள்ளிவிட முயற்சிப்பது கண்டிக்கத்தக்க செயலாகும்.
ஆகவே அரசால் வாக்களிக்கப்பட்டது போல் தீர்வையற்ற மோட்ட சைக்கிளை ஊடகவியலாளர்களுக்கு வழங்க வேண்டும் என உலமா கட்சி கோரிக்கை விடுப்பதுடன் இது சம்பந்தமாக ஊடக அமைப்புக்கள் வாய் திறக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறது.

Post a Comment