பாலியல் குற்றவாளிகளுக்கு, மரண தண்டனை விதியுங்கள் - சுதர்சினி
ஐந்து வயது சிறுமி சேயா பாலியல்வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளிற்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என பிரதியமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மார்ச் 15 ம் திகதி நீர்கொழும்பு உயர் நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பில் தனது தீர்ப்பை அறிவிக்க உள்ள நிலையிலேயே பிரதியமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பிலான விசேட பாராளுமன்ற குழுவில் அங்கம் வகிக்கும் பிரதியமைச்சர் கடந்த மாதம் வவுனியாவில் பாடசாலை மாணவிக்கு நிகழ்ந்த கொடுமை , சிறுவர்களிற்கு வீடுகள் கூட பாதுகாப்பில்லை என்பதை உணர்த்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவும் பாக்கிஸ்தானும் மரண தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் மரண தண்டனையை நடைமுறைப்படுத்தியுள்ளன, இந்தியா தனது எட்டு வருட தடையை முடித்துக்கொண்டு மும்பாய் தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கஜாப்பிற்கு தண்டனையை நிறைவேற்றியது,மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு அப்பால், சிறுவர் பாலியல் வன்முறை போன்றவை தொடர்பிலான சட்டங்களை இறுக்கமாக்க வேண்டும் எனவும் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
Post a Comment