Header Ads



அமைச்சரவைக்கு எதிரான மனு, விசாரணைக்கு ஏற்பு

தற்போதைய அரசாங்கம் அமைச்சரவையை நியமித்த முறை சட்டவிரோதமானது என உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை, மே மாதம் 3ம் திகதி பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

சட்டத்தரணி அருண லக்சிறி என்பவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் படி, அமைச்சரவையில் உறுப்பினர்கள் 30 பேரே இருக்க முடியும் என அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால், தற்போதைய அமைச்சரவையில் அதற்கு மேலதிகமாக இருப்பதாகவும் இதனால் அரசியலமைப்பு வறையறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அரசாங்கம் அமைச்சரவையை நியமித்த முறை சட்டவிரோதமானது என உத்தரவிடுமாறு உயர் நீதிமன்றத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவில் பதிலளிக்க வேண்டியவர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களும் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதன்படி குறித்த வழக்கை மே 3ம் திகதி பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ள, பிரதம நீதியரசர் உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.

No comments

Powered by Blogger.