Header Ads



அரசியலமைப்பு சபையாக மாறிய பாராளுமன்றம், அடுத்தது என்ன..?

பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை பாராளுமன்றத்தில் நேற்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. குறித்த பிரேரணைக்கு எவரும் வாக்கெடுப்புக் கோராததால் திருத்தங்களுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

புதிய பிரேரணையின் பிரகாரம் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்காக முழு பாராளுமன்றமும் அரசியலமைப்பு சபையாக மாற்றப்படும். இதில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடக்கப்பட இருப்பதோடு அரசியலமைப்பு சபையின் தலைவராக சபாநாயகர் செயற்படுவார். இதன் பிரதித் தலைவர்களாக ஏழு பேர் தெரிவுசெய்யப்பட இருப்பதோடு உபகுழுக்களும் நியமிக்கப்படவிருக்கின்றன. பிரதமர், சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், நீதியமைச்சர், அரசியலமைப்பு சபையால் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் இதில் அங்கம் வகிப்பார்கள்.

அரசியலமைப்பு சபையின் முதலாவது அமர்வின்போது பிரதித் தவிசாளர்கள் தெரிவுசெய்யப்படவிருப்பதோடு உபகுழுக்களுக்கான உறுப்பினர்களும் நியமிக்கப்படவுள்ளனர். இதன் நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையாகவே இருக்கும்.

அரசியலமைப்பு தயாரிப்பு பணிகள் எவ்வாறு இடம்பெறவேண்டும் என்பதை அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டிருக்கும் பாராளுமன்றமே தீர்மானிக்கும்.

இதில் எடுக்கப்படும் தீர்மானத்துக்கு அமைய அரசியலமைப்பு வரைபு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட பின்னர் மக்களின் அனுமதிக்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும்.

No comments

Powered by Blogger.