Header Ads



சிலர் குழப்பம் ஏற்படுத்த முயற்சி - ரவூப் ஹக்கீம்


கட்சியின் செயற்பாடு தொடர்பில் கட்சிக்குள் கலந்துரையாடாமல் வெளியில் இருந்துகொண்டு அறிக்கைவிடுவதோ அல்லது தலைமைத்துவத்துக்கு எதிராகக் கருத்துக் கூறுவதிலோ எந்தவித பலனும் இல்லையென சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரசின் மாநாட்டில் கலந்துகொள்ளாதவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதா என்பதை தேவைப்பட்டால் கட்சி கூடி தீர்மானிக்கும் என்றும் அவர் கூறினார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று(21)நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அண்மையில் நடைபெற்ற மு.கவின் தேசிய மாநாட்டில் அக்கட்சியின் செயலாளர் கலந்துகொள்ளாமை குறித்து அமைச்சரிடம் வினவப்பட்டது. இதற்குப் பதிலளிக்கும்போதே அமைச்சரும் மு.கவின் தலைவருமான ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார்.மேலும் இது பற்றிக்கூறிய அவர்:

பிரச்சினை இல்லாத கட்சி எதுவும் இல்லை. கட்சிகளுக்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்படுவது சாதாரணமானது. கட்சியின் செயற்பாடு தொடர்பில் உடன்பாடில்லாவிட்டால் அதனை கட்சிக்குள் பேசித் தீர்க்கவேண்டும். அதனைவிடுத்து வெளியில் இருந்துகொண்டு அறிக்கை வெளியிடுவதும், தலைமைத்துவத்தை விமர்சிப்பதும் எந்தவித பலனையும் கொடுக்காது. அவ்வாறானவர்கள் தொடர்பில் தேவைப்பட்டால் கட்சி கூடி தீர்மானம் எடுக்கும் என்றார்.

மு.கா மாநாட்டில் முஸ்லிம்களின் கலாசாரத்துக்கு மாறான முறையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாக முன்வைக்கப்படும் விமர்சனம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்,

சகல இனங்களின் கலாசாரத்துக்கும் மதிப்பளிப்பதன் ஊடாகவே இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். மு.கா மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்த ஆதிவாசிகள், தமது கலாசார வழக்கத்தின் படி கந்தக் கடவுளை வணங்கி நாட்டுத் தலைவருக்கு தேன் முட்டியைக் கொடுத்து வரவேற்பது வழமை. இதனை முன்னிட்டு தமது வரவேற்பு நடனத்தை நடாத்துவதற்கு அனுமதி கோரியிருந்தனர்.

எமது மதத்தில் அவ்வாறான கலாசாரம் இல்லாதபோதும் பிறிதொரு இனத்தின் கலாசாரத்துக்கு மதிப்பளித்து அதற்கு இடமளித்தோம். இதில் என்ன பிழை இருக்கிறது. இதை வைத்து முஸ்லிம் கலாசாரத்துக்கு எதிராக செயற்பட்டதாக சிலர் குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

அதேவேளை, மஹிந்த ராஜபக்‌ஷ நிர்வாகத்தில் தமது இனத்துக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்திருந்த நிலையிலேயே அப்போதைய அரசாங்கத்திலிருந்து விலகவேண்டி ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், யுத்தம் முடிவடைந்த பின்னர் மீண்டும் பல யுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டு நல்லிணக்கத்துக்கான சூழல் இல்லாமல் செய்யப்பட்டது. எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையிலான அரசாங்கத்தில் நல்லிணக்கத்தைக் குழப்ப இடமளிக்கப்படாது என்றார்.

6 comments:

  1. Hey Rauf. You can't justify your actions. Your time as leader of this party getting closer to end???????????????????

    ReplyDelete
  2. "எவர் மற்ற இனத்திற்க்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அவ் இனத்தை சேர்ந்தவர்"எனும் நபி மொழி தலைவருக்கு தெரியாது போலும்,கந்த கடவுளை வழி பட நமது மேடையில் இடம் கொடுத்து இறைவனுக்கு சிர்க் செய்ய வழி வஹுதத்தை நியாயம் என்று சொல்ல வரும் தலைவரிடம் இறைவன் மருமைல் கேட்டும் கேள்விக்கு பதில் என்னவென்று கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள்.

    ReplyDelete
  3. ரஊப் ஹகீம் அவர்களின் தலைமையின் மூலம் இந்நாட்டு முஸ்லிம் மக்களின் கலாச்சாரத்தை முன்னேற்றுவதற்காக ஏதாவது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா ? என்பதை எங்கும் அறிய முடியவில்லை .மாறாக இலங்கை முஸ்லிம்களின் கலாசாரத்தை பாதுகாத்தவர்கள் கடந்த கால தலைவர்கள் என்பதையே வரலாறு கூறுகின்றது .மேலும் ரஊப் ஹக்கீம் அவர்களின் ஆட்சிக்காலம் ஏதாவது இன்னொரு கட்சியை விமர்சிப்பதிலும் குறைகான்பதிலுமே கடத்தப்பட்டிருக்கின்றது என்பதை அவரது பாராளுமன்ற உரைகளிலும் தேர்தல் கால உரைகளிலும் அவதானிக்க கூடியதாக உள்ளது .இந்நாட்டு முஸ்லிம் மக்களை கல்வி ,பொருளாதார ,சுகாதார ,கலாச்சார விடயங்களில் முன்னேற்றுவதற்கான எந்தவொரு திட்டங்களும் இவரிடத்தில் காணப்படவில்லை .

    ReplyDelete
  4. "கட்சிக்குள் பிரச்சினை இருப்பது சகஜம்"... (ஏனெனில் டீல் மூலமான பங்குக் குழப்பங்கள்! )

    சுப்பர் தலைவா உங்கள் நியாயப்படுத்தல்! கட்சி! கட்சி! கட்சி!

    தலைவரை (பரிவாளங்களோடு) வாழவைக்கும் கட்சியும்..!
    கட்சியை வாழவைக்கும் "போராளி" தொண்டர்களும் சில "பேமாளி" மக்களும்!

    பரிதாபம்! பரிதாபம்! பரிதாபம்!


    ReplyDelete
  5. தலைவர் சொல்லுவதை அப்படியோ ஏற்றால் அவர் போராளி, தவறென சுட்டிக்காட்டினால்..., அதிகாரம் பறிபோகும்..! தலைமைக்கெதிரான அறிக்கையென குறிப்புவரும்.! போட்டி கொடுத்தால் ...கட்சி கூடி தீர்மானமெடுக்கும்ம்...???
    கட்சியென கூடி அல்லக்கைகளை / தலையாட்டிகளை / பதவி மோகம் கொண்டவர்களை கூட்டி வைத்துவிட்டு தன் தலைவன் என்று சொல்லிவிட்டு ,தான் சொல்லியதனை தலையாட்டவைத்துவிட்டு ....கட்சி தீர்மானமென ஓலமிடும் தலைமை என்பது தலைமையா.....!! த்தூ...

    ReplyDelete
  6. This busterd need ti kikced out from the leadership.

    ReplyDelete

Powered by Blogger.