வடக்கு கிழக்கை மீண்டும் இணைத்தால், இனப்பிரச்சினையை தூண்டும் - ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை
வடக்கு – கிழக்கு இணைப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வாகாது எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், வடகிழக்கு இணைப்பானது இனப்பிரச்சினையை தூண்டும் என எச்சரிக்கை விடுத்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு கிழக்கு இணைக்கப்படுமாயின் மீண்டும் இனங்களுக்கு இடையில் முறுகள் நிலை ஏற்பட்டு மோதல்கள் ஏற்படுமே தவிர ஒருபோதும், இனப்பிரச்சினைக்குத் தீர்வாக வடக்கு கிழக்கு இணைப்பு அமையாது.
இன்று சிலர் இனப்பிரச்சினைக்கு தீர்வாக வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளனர். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கு நாங்கள் பூரண ஆதரவினை வழங்குகின்றோம்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்போது ஏற்பட்டுள்ள அமைதி நிரந்தரமாக நீடிக்க வேண்டும். இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும், இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்பதிலே நாம் மிகத்தெளிவாக இருக்கின்றோம். ஆனால், இனப்பிரச்சினைக்குத் தீர்வாக வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பதன் மூலம் அது பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது.
ஆகவே, இனப்பிரச்சினைக்கு தீர்வு வடக்கு கிழக்கு இணைப்பு அல்ல. மாறாக, நாட்டில் உள்ள 9 மாகாணங்களும் தனித்துவமாக இயங்கக்கூடிய வகையில் 13 ஆவது திருத்தச் சட்டம் பூரணமாக அமுல்படுத்தப்பட வேண்டும்.
பொலிஸ், காணி போன்ற அரசியல் அதிகாரங்கள் வழங்கப்படுவதன் மூலம் தமது மாகாணத்துக்கு தேவையானவற்றை நிறைவேற்றக் கூடியவர்களாக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பலம் மிக்கவர்களாக இருக்க வேண்டும்.
அவ்வாறின்றி, நாட்டை 5 பிராந்தியங்களாக பிரிக்க வேண்டும் எனத்தெரிவிக்கும் த.தே.கூவின் கோரிக்கைகயை நாங்கள் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம். வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பதற்காகவே இத்திட்டம் சூசகமாக போடப்பட்டுள்ளது.
வடக்கு – கிழக்கு மாகாணங்களுடன், வடமத்திய மாகாணத்தையும் இணைத்துக் கொண்டு ஒரு பிராந்தியமாக மாற்றுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இணக்கம் தெரிவிக்குமா? என நான் கேள்வி கேற்கின்றேன். அவர்கள் அதற்க இணக்கம் தெரிவிப்பார்களாயின் பிராந்திய தீர்வுத் திட்டத்துக்கு முஸ்லிம்கள் ஆதரவு வழங்குவது தொடர்பில் நாங்கள் சிந்திக்க முடியும்.
வடக்கு கிழக்கு இணைந்திருந்த போதே நாங்கள் முஸ்லிம்களுக்கு தனி அலகு வேண்டும் என வலியுறுத்தினோம். எனினும், இன்று வடக்கு கிழக்கு பிரிந்துள்ள நிலையில் எமக்கு தனி அலகு அத்தியவசியமில்லை.
த.தே.கூ. கூறுவது போன்று வடக்கு கிழக்கு இணைக்கப்படுமாயின் அதில் முஸ்லிம்களின் விகிதாசாரம் 16 மூ ஆகும். அதனால் முஸ்லிம்களின் தேவை அங்கு நிறைவேற்றப்படும் என்று உறுதியாக கூற முடியாது. – என அவர் மேலும் தெரிவித்தார்.
வடகிழக்கு இனைந்து தமிழ் தீவிரவாதிகளுக்கு அடிமையாய் வாழ்வதை விட சோனகன் எல்லாம் கடலில் குதித்து சாவதே மேல்
ReplyDeleteசெரியான கருத்து வடகிழக்கு ஒருக்காலும் இணையக்கூடாது
ReplyDeleteநாய் வித்த காசு குரைக்கவா போகுது என்ற போக்குடைய உங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உங்களுக்கு தேவையானதை கவனித்தால், வடக்கும் கிழக்கும் இணைத்திருப்பதே சிறந்தது என கூறுவதட்கு உங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும்?
ReplyDeleteகனவான் ஒப்பந்தத்தை மீறியதில் இருந்து.... ராஜபக்சவை ஆதரித்தது வரை உங்களின் சகல அரசியலும் எமக்கு தெரிந்ததே.
நீங்கள் எதாவது நல்ல காரியம் செய்ய வேண்டுமானால் அரசியலில் இருந்து ஒய்வு பெற்று, உங்கள் பிரதேசத்தில் உள்ள ( முஸ்லிம் மக்களின் அரசியலுக்கே தலைமைத்துவம் கொடுக்கக் கூடிய ஆற்றலும் அறிவும் நம்பிக்கையும் உள்ள) இளம் அரசியல் வாதிகளுக்கு இடம் கொடுக்கவும்.
Ulakaththukku.theriumda.yar.payankaravathi.or.thiviravaathi.enru.vadakilakku.enaiva.nichchayam.singalavanum.tamilanum.ontru.servathu.nichchayam.ninga.kadalil.vilunkada
ReplyDeleteஹீ ஹீ ஹீ 30 வருடகாலமாக விழுந்தீர்களே அவ்வாரா? சிறீதரன் !
Deleteவடக்குடன் கிழக்கு ஒருபோதும் இணையாது. கிழக்கின் தனித்துவம் காப்போம்
ReplyDelete