அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுமா..? என்னை சந்திக்கவும் - மங்கள, மஹிந்தவுக்கு அழைப்பு
எதிர்க்கட்சிகள் சில ஒன்றிணைந்து தேங்காய் உடைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
குருணாகல் பகுதியில் 24-03-2016 நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் அவர் ஊடங்களுக்கு கருத்ததுத் தெரிவித்த போது அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்,
அரசாங்கத்தை எவ்வாறு கவிழ்ப்பது என்பதனை அறிந்துகொள்ள வேண்டுமாக இருந்தால் மஹிந்த ராஜபக்ஸவிடம் என்னை சந்திக்குமாறு கூறுகின்றேன். அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லை என்பதனை எடுத்துக்காட்டும் நோக்கிலேயே அவரது திருட்டுக் குழுவினர் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று தேங்காய் உடைக்கின்றனர்.
Post a Comment