Header Ads



புகலிடம் மறுக்கப்பட்டவர்களுக்கு, ஜெர்மனி செய்யும் பண உதவி

ஜேர்மனி நாட்டில் புகலிடம் மறுக்கப்பட்ட அகதிகளை அவர்களின் தாய்நாடுகளுக்கு எப்படி திருப்பி அனுப்புவது என்பது தொடர்பான நீண்டகால பிரச்சனைக்கு அந்நாட்டு அரசு ஒரு புது வழியை கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேர்மன் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலின் ‘அகதிகளுக்காக ஜேர்மனியின் கதவுகள் திறந்து இருக்கும்’ என்ற தாராள கொள்கையின் விளைவாக தற்போது ஜேர்மனியில் சுமார் 7,70,000 பேர் புகலிடத்திற்காக விண்ணப்பம் செய்துள்ளனர்.

ஆனால், குடியமர்வு துறை அதிகாரிகள் பேசியபோது, ‘இந்த எண்ணிக்கையில் 50 சதவிகிதத்தினருக்கு புகலிடம் மறுக்கப்பட்டு அவர்களின் தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், புகலிடம் மறுக்கப்பட்ட அகதிகளை திருப்பி அனுப்புவது என்பது எளிதான விடயம் அல்ல. இதற்காக ஜேர்மனி அரசு ஒரு புதிய வழியை கண்டுபிடித்து அதனை தற்போது செயல்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, ‘புகலிடம் நிராகரிக்கப்பட்ட அகதிகளுக்கு ஒரு பெரிய தொகை அளித்து அரசாங்கமே அவர்களை தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்புவதாக’ தகவல்கள் தெரிவிக்கின்றன.

உதாரணத்திற்கு, ஈராக் நாட்டை சேர்ந்த Lauand Sadek(21) என்ற வாலிபர் ஜேர்மனியில் புகலிடம் கோரி வந்தபோது, அவருக்கு புகலிடம் மறுக்கப்பட்டது.

மேலும், அரசு செலவில் அவருக்கு விமான பயணச்சீட்டு எடுத்துகொடுத்தது மட்டுமில்லாமல், தாய்நாட்டில் சொந்தமாக சிறுதொழில் தொடங்க 6,000 யூரோவை கொடுத்து அனுப்பியுள்ளது.

இதனை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்ட அந்த வாலிபரும் கடந்த டிசம்பர் மாதம் தாய்நாட்டிற்கு திரும்பி ஒரு சிறிய கடை ஒன்றை தொடங்கியுள்ளார்.

இதேபோல், மற்ற 100 ஈராக் அகதிகளுக்கும் ஒரு தொகையை கொடுத்து அவர்களது நாட்டில் சிறிய உணவகம் அல்லது மளிகை கடைகளை திறந்துக்கொள்ள ஜேர்மனி அரசு உதவியுள்ளது.

மேலும், கடந்த 2 ஆண்டுகளில் கொசோவோ நாட்டை சேர்ந்த 5,000 அகதிகளுக்கு புகலிடம் மறுக்கப்பட்டதுடன், அவர்கள் தாய்நாட்டுக்கு திரும்பி தொழில் தொடங்க ஒவ்வொருவருக்கும் 3,000 யூரோ வீதம் ஜேர்மனி அரசு வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments

Powered by Blogger.