எகிப்தைச் சேர்ந்தவர் அரபு லீக், செயலாளராக நியமனம் - கத்தார் அதிருப்தி
அரபு லீக் அமைப்பின் புதிய பொதுச் செயலராக, எகிப்து நாட்டைச் சேர்ந்த அகமது அபுல் கெய்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
அரபு லீக் உறுப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை எகிப்து தலைநகர் கெய்ரோவில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பஹ்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் காலித் பின் அகமது அல்-காலீஃபா கூறியதாவது:
எகிப்தைச் சேர்ந்த அகமது அபுல் கெய்ட்டை அரபு லீக் புதிய பொதுச் செயலராக நியமிக்க அரபு லீக் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது என்றார் அவர். அகமது அபுல் கெய்ட், எகிப்தின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் ஆவார். இதற்கிடையே, அகமது அபுல் கெய்ட்டின் நியமனம் குறித்து கத்தார் அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது. அகமது அபுல் கெய்ட் தங்கள் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர் என கத்தார் கூறியது.
Post a Comment