Header Ads



இலங்­கை­யினை நினைத்து, மிகவும் பெரு­மைப்­ப­டு­கின்றேன் - தவக்குல் கர்மான்

-தொகுப்பு: எம்.ஐ.அப்துல் நஸார் + விடிவெள்ளி-

மாவ­னல்­லையில் அமைந்­துள்ள ஜாமிஆ ஆயிஷா சித்­தீக்கா மகளிர் அறபுக் கல்­லூரின் மூன்­றா­வது பட்­ட­ம­ளிப்பு விழா கடந்த 16.03.2016 அன்று கொழும்பு பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. இதில்  யெமன் நாட்டைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற மனித உரிமை செயற்­பாட்­டா­ளரும் ஊட­க­வி­ய­லா­ள­ரு­மான தவக்குல் கர்மான் பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொண்டார். அவர் இந் நிகழ்வில் ஆற்­றிய ஆங்­கில மொழி மூல­மான உரையின் 

இந்த நிகழ்வில் பங்­கு­பற்­றி­யி­ருக்கும் உங்கள் அனை­வ­ருக்கும் எனது வாழ்த்­துக்கள். ஆயிஷா சித்­தீக்கா அறபுக் கல்­லூ­ரியின் மாண­வி­க­ளுக்­கான பட்­ட­ம­ளிப்பு விழாவில் கலந்து கொள்­வதில் மிகவும் மகிழ்ச்­சி­ய­டை­கின்றேன். இவ்­வி­ழா­வுக்கு என்னை அழைத்­த­மைக்­காக எனது நன்­றி­களைத் தெரி­வித்துக் கொள்­கின்றேன். இலங்கை மக்கள் மிகவும் இரக்க சிந்தை உடை­ய­வர்கள். இலங்­கை­யினை நினைத்து மிகவும் பெரு­மைப்­ப­டு­கின்றேன். இங்­குள்ள மக்கள் ஒரு­வ­ருக்­கொ­ருவர் மரி­யாதை செய்­கின்­றனர். இலங்­கையில் மக்கள் அனை­வரும் எவ்­வித வெறுப்­பு­ணர்வோ அல்­லது வன்­மு­றையோ இன்றி வாழ்ந்து வரு­கின்­றனர்.மதங்கள் பற்றி நோக்­காது இங்­குள்ள அனை­வரும் மனி­தர்கள், இலங்­கை­யர்கள் என்ற வகையில் நான் ஒவ்­வொ­ரு­வ­ரையும் மதிக்­கின்றேன். இதன் மூலம் இலங்­கை­யினை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும் அதே­போன்று உல­கினை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும் பங்­காற்ற முடியும்.

இந்த நிகழ்வில் தாய்­மை­யினைப் பற்றி பேச விரும்­பு­கிறேன். முதலில் தாய்மை என்றால் என்ன என்­ப­தற்­கான வரை­வி­லக்­க­ணத்தைக் கூறுங்கள். தாய்மை என்­பது குடும்­ப­மொன்­றுடன் மாத்­திரம் தொடர்­பு­பட்­டதா? அல்­லது தாய்மை என்­பது முழுத்­தே­சத்து மக்­க­ளோடும் தொடர்­பு­பட்­டதா? அல்­லது தாய்மை என்­பது உலகம் முழு­வ­தற்­கு­மா­னதா? நீங்கள் உங்­க­ளது கல்­லூ­ரியில் படிக்­கின்ற பாடங்கள் தொடர்பில் நான் பெரு­மை­ய­டை­கின்றேன். ஆனால் அவை நீங்கள் எவ்­வாறு நல்­ல­தொரு பிர­ஜை­யாக வாழ­வேண்டும் என்­பதை உங்­க­ளுக்குக் கற்­றுத்­தர வேண்டும். சமூக களத்தில் நீங்கள் எவ்­வாறு பங்­காற்ற வேண்டும் என்­பதை உங்­க­ளுக்குக் கற்­றுத்­தர வேண்டும்.

சமூ­கத்­தி­லுள்ள அனைத்துத் துறை­க­ளிலும் நீங்கள் எவ்­வாறு பங்­கேற்க வேண்டும் என்­ப­தையும், உங்­க­ளது மகனை, பிள்­ளை­களை, உங்­க­ளது குடும்­பத்தை, உங்கள் கண­வரைக் கூட எவ்­வாறு பரா­ம­ரிக்க வேண்டும் என்­ப­தையும் உங்­க­ளுக்குக் கற்­றுத்­தர வேண்டும். அது மட்­டு­ம­ல்ல, நீங்கள் பலம்­மிக்க ஒரு பெண்­ணாக எவ்­வாறு உரு­வாக வேண்டும் என்­ப­தையும் கற்­பிக்க வேண்டும். நீங்கள் பலம்­மிக்க பெண்­க­ளாக மாற வேண்டும்.  அல்­குர்­ஆ­னோடு இருப்­பீர்­க­ளானால், நீங்கள் நிச்­சயம் பலம்­மிக்க பெண்­க­ளா­கவே இருப்­பீர்கள், மகிழ்ச்­சி­யோடு இருப்­பீர்கள்.  இது உங்கள் நிகழ்வு. இதில் நீங்கள் சிரிக்க வேண்டும். மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்த வேண்டும். மிகச் சிறந்த பின்­பு­லத்தில் இருந்து நீங்கள் இந்த நிகழ்வில் பங்­கேற்­றி­ருக்­கி­றீர்கள். 

நல்­ல­தொரு தாயாக இருக்க வேண்டும் என்­ப­தற்­கா­கத்தான் நீங்கள் உங்கள் கல்­லூ­ரி­யி­லி­ருந்து பட்டம் பெற்­றி­ருக்­கின்­றீர்கள். நல்ல தாயாக இருப்­ப­தென்­பது உங்­க­ளது பிள்­ளை­க­ளுக்கு மாத்­தி­ர­மல்ல. நன்­றாக ஞாப­கத்தில் கொள்­ளுங்கள், நீங்கள் நல்­ல­தொரு தாயாக இருப்­பது முஸ்லிம் மக்கள், பௌத்த மக்கள், கிறிஸ்­தவ மக்கள் மற்றும் இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்­க­ளுக்­கு­மா­கவும் முழுத் தேசத்து மக்­க­ளுக்­கு­மா­க­வு­மாகும். அத்­துடன் உல­கி­லுள்ள அனைத்து மக்­க­ளுக்கும் நல்­ல­தொரு தாயாக இருக்க வேண்டும் என்­ப­தற்­கா­க­வு­மாகும். 

பெண்­க­ளுக்­கான பாரம்­ப­ரிய விதி­மு­றை­களை நாம் புறந்­தள்ள வேண்டும். நான் இங்­கி­ருக்­கின்றேன், என் தேசத்தின் தாயாக இருக்­கின்றேன் எனக் கூறுங்கள். நான் எனது நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வதில் பங்­காற்­று­கின்றேன். ஊழ­லுக்­கெ­தி­ராக போரா­டு­வதில் பங்­காற்­று­கின்றேன், மனித உரி­மை­களை காப்­பாற்­று­வ­தற்­காகப் போரா­டு­கின்றேன், மாற்­ற­மொன்றை உரு­வாக்­கு­வ­தற்­காகப் போரா­டு­கின்றேன், பல­மான குடும்­பத்தை உரு­வாக்­கு­வ­தற்­காகப் போரா­டு­கின்றேன், நல்­ல­தொரு பிர­ஜை­யாக வாழ்­வ­தற்­காக எனது கண­வ­னுக்கு உத­வு­கின்றேன் எனக் கூறுங்கள்.  

எமக்கு மற்­று­மொரு பல்­க­லைக்­க­ழகம் தேவை. அது தந்­தை­மா­ருக்­கு­ரிய பல்­க­லைக்­க­ழ­க­மாகும். ஆம், நிச்­ச­மாக எமக்கு அவ்­வா­ற­ான­தொன்று அவ­சி­ய­மாகும். ஏனெனில் வீட்­டி­னுள்­ளேயும், வீட்­டுக்கு வெளி­யேயும் அவர்­க­ளது பங்­க­ளிப்பு என்ன என்­பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். நான் தவக்குல் கர்மான், நானும் பெண்­க­ளுக்­கான பல்­க­லைக்­க­ழ­க­மொன்­றில்தான் படித்தேன். அதன் பின்­னரும் எனது கல்­வியைத் தொடர்ந்தேன். அது பெண்­க­ளுக்­கான பல்­க­லைக்­க­ழ­க­மல்ல, அது ஒரு திறந்த பல்­க­லைக்­க­ழகம். அங்கு அனைத்து வித­மான அமர்­வுகள், ஆய்வுக் கருத்­த­ரங்­குகள், விரி­வு­ரைகள் என முழு வாழ்க்­கை­யிலும் ஆண்­க­ளோடு இணைந்து சமூ­கத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக பணி­யாற்­றினேன். 

நாம் எமது சமூ­கத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக எமது சகோ­த­ரர்­க­ளுடன் இணைந்து பணி­யாற்ற வேண்டும். நீங்கள் உங்கள் வீட்டில் இருந்­த­வாறே உங்கள் வீட்டைக் கட்­டி­யெ­ழுப்ப முடியும், ஏன் உங்­க­ளது நாட்­டையும் கட்­டி­யெ­ழுப்ப முடியும்.  உங்­க­ளது வீட்டில் உங்கள் கனவு என்ன?  – நல்ல அழ­கான வீடு, அமைதி, செல்வம், ஒரு­வ­ரோடு ஒருவர் அன்பு செலுத்தக் கூடிய, இணைந்து பணி­யாற்­றக்­கூ­டிய தன்மை, சமத்­துவம், நீதி – இவ்­வாறு எவற்­றை­யெல்லாம் நீங்கள் உங்கள் வீட்டில் எதிர்­பார்க்­கி­றீர்­களோ, அதுவே இலங்­கைக்குத் தேவை. அவை தான் முழு உல­கத்­திற்கும் தேவை.  
பெண்கள் பிர­த­ம­ரா­கவும், ஜனா­தி­ப­தி­யா­கவும் இருந்து வழி நடாத்­திய உலகின் ஒரே­யொரு நாடான இலங்­கையில் இப்­போது நான் இருந்து கொண்­டி­ருக்­கிறேன். இங்­கி­ருக்­கின்ற குழு­வி­னரில் இருந்தும் இலங்­கையை வழி­ந­டத்­தக்­கூ­டிய தலை­வர்கள் உரு­வாக வேண்டும். அதனைக் காண்­ப­தற்­காக நான் காத்­தி­ருக்­கிறேன்.  அதி­க­மான பெண்கள் பாரா­ளு­மன்­றத்தில் பிர­தி­நி­தி­க­ளாக இருக்க வேண்­டு­மென எதிர்­பார்க்­கின்றேன். நான் இங்கு குறிப்­பி­டு­வது வெறு­மனே முஸ்­லிம்­களை மாத்­தி­ர­மல்ல, அனைத்து மதங்­க­ளையும் சேர்ந்த பெண்­க­ளை­யும்தான் குறிப்­பி­டு­கின்றேன். அனைத்து இலங்கை மக்­களை, மனி­தா­பி­மானம் உள்ள மக்­க­ளைத்தான் குறிப்­பி­டு­கின்றேன்.

அதுவே இலங்­கைக்கு அவ­சி­ய­மா­ன­தாகும். ஏனென்றால் எவ்­வாறு ஒரு­வரை ஒருவர் நேசிக்க வேண்டும், வாழ வேண்டும், பணி­யாற்ற வேண்டும் என்­ப­தனை உல­கிற்குக் காட்­டு­வ­தற்கு சிறந்த முன்­மா­தி­ரி­மிக்க நாடாக இலங்கை காணப்­ப­டு­கின்­றது.  அல்­லாஹு தஆலா அல்­குர்­ஆனில் நல்ல விட­யங்­க­ளுக்­காகப் பணி­யாற்­றுவோர் ஆண்­க­ளாக மாத்­தி­ரமே இருக்க வேண்டு­மென கூற­வில்லை. ஆண்­க­ளையும் பெண்­க­ளையும் சேர்த்தே அல்­குர்­ஆனில் அது­பற்றிக் குறிப்­பி­டப்­ப­டு­கி­றது.  அது­போல குர்­ஆனில் மார்க்க விவ­கா­ரங்­களைப் பற்றி மாத்­திரம் பேசப்­ப­ட­வில்லை. முழு வாழ்க்­கை­யையும் பற்­றியே அல் குர்ஆன் பேசு­கி­றது.

எனவே, எனது சகோ­த­ரி­களே.. எனது மகள்­களே....  நீங்கள் பலம் மிக்­க­வர்­க­ளாக இருத்தல் வேண்டும். நீண்­ட­தொரு பய­ணம் என்­பது நாம் எடுத்­து­வைக்கும் ஒரு அடியில் இருந்தே ஆரம்­பிக்­கின்­றது. இந்த சமூ­கத்தை சிறந்த சமூ­க­மாக மாற்­று­வ­தற்கு  நீங்கள் அனை­வரும் உங்­க­ளது கல்­வியைத் தொடர வேண்டும், உங்­க­ளது முயற்­சியைத் தொடர வேண்டும்.  அனை­வ­ருக்கும் சிறந்த வாழ்க்­கை­யினை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக நான் இங்கு பொறுப்­புடன் இருக்­கின்றேன் என்­பதை நீங்கள் எல்­லோ­ருக்கும் எடுத்துக் கூறுங்கள். நான் இங்­கி­ருக்­கின்றேன், பொறுப்­பு­ணர்­வுடன் இருக்­கின்றேன்,  

பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வாக இருக்­கின்றேன் எனக் கூறுங்கள். பாதிக்­கப்­பட்­ட­வ­ளாக இருப்­ப­தற்கு ஒரு போதும் இணங்­கி­வி­டா­தீர்கள். எமது கலாச்­சா­ரத்தைப் பாது­காப்­ப­தற்­காக பெண்கள் கண்­டிப்­பாக தலை­மைத்­து­வத்தில் இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் குடும்­பத்தில் தாயாக இருப்­பது போல, அனைத்து சமூ­கத்­தி­ன­ருக்கும் தாயாக இருத்தல் வேண்டும்.  மனித உரிமை தொடர்­பான செயற்பாட்டின் பின்னரும், நோபல் பரிசினை வென்றதன் பின்னரும் என்னிடம் கேட்டார்கள், உன்னால் எப்படி இதனைச் செய்ய முடிந்தது என்று. யெமனில் இருக்கின்ற இந்த பயம் நிறைந்த சூழ்நிலையில்.... மூன்று பிள்ளைகள் இருக்கும் நிலையில்...  எவ்வாறு மாற்ற முடிந்தது ? நான சொன்னேன் நான் ஒரு தாய் அதனால் அதை செய்தேன்

ஏனென்றால் எனது பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் நான் பயப்படுகின்றேன். அதுபோலவே எமன் நாட்டில் இருக்கின்ற அனைத்துத் தலைமுறையினரதும் எதிர்காலம் தொடர்பிலும் நான் பயப்படுகின்றேன். எனவேதான் நீங்கள் தேசத்து மக்கள் அனைவரதும் தாயாக இருங்கள். மீண்டும் ஒரு பெண் ஜனாதிபதியாக, பெண் பிரதமராக பாராளுமன்ற பிரதிநிதிகளாக தொழில் முயற்சியாளர்களாக, சிறந்த ஆசிரியைகளாக, வைத்தியர்களாக அனைத்துத் துறைகளிலும் உங்களது பெயர்கள் கூறப்பட வேண்டும். அதற்காக காத்திருக்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ். 

11 comments:

  1. என்னம்மா இப்படிப் பண்ணிட்டீங்கலேம்மா
    நீங்க இலங்கைக்கு வந்து நடந்து கொண்டது போல எல்லா பெண்களும் நடந்து கொண்டால் நடக்கத் தொடங்கினால் பெண்கள் சீரழிந்து சின்னாபின்னமா போய் மறுமை வாழ்க்கை மண்ணாப் போய்டும் உங்கள் நோபல் பரிசு உங்களோடு இருக்கட்டும் உங்கள் முன்மாதிரியும் உங்களோடு இருக்கட்டும் நாங்கள் வேறு இஸ்லாமிய அடிப்படையில் வாழ்ந்த தியாக சஹாபிமுஸ்லிம் பெண்களை முன்மாதிரியா எடுத்துகிரம் நீங்க இன்னொரு தரம் இலங்கை வந்து உங்க முன்மாதிரிய எங்க பெண்களுக்கு காட்டாம இருந்தா போதும்

    ReplyDelete
    Replies
    1. சொர்க்கம் கிடைத்தால் எப்படி மறுமை வாழ்க்கை மண்ணாகும்?

      Delete
  2. இவர்கள் கூறியவற்றில் நல்லவற்றை எடுத்துக்கொண்டு மோசமானவற்றை குப்பையில் எறிந்துவிடுங்கள்.

    ReplyDelete
  3. So the Organizers can target MALALA now, she is also in this category,

    ReplyDelete
    Replies
    1. No one has invited her or said that Sri Lankan ladies should follow Malala or she is the role model. You are going out of topic.

      Delete
  4. இவ்வளவு சிறந்த ஒரு பெண்கள் அறபுக் கலாசாலை ஏன் இவரை பிரதம அதிதியாக தெரிவு செய்தது? இஸ்லாத்தில் மனித உரிமை பற்றி இவர் எங்களுக்கு சொல்லித்தர தேவை இல்லையே. இவருடைய நோபல் பரிசு , இவருடைய திறமைக்காகவோ அல்லது சேவைக்காகவோ அல்ல, மாறாக மலாலா, தஸ்லிமா நஸ்ரின் போன்றவர்களை உருவாக்கிய யஹூதிகளின் திட்டமே... இதை எப்போது நமது முஸ்லிம் சமூகம் உணர்ந்து கொள்ளுமோ?

    ReplyDelete
  5. தவக்குல் கர்மான் நீ ஒரு இரும்புப் பெண் தான்
    நீ இலங்கையில் கழித்த ஒரு சில நாட்களில் எமக்குத் தந்த Home Work அதிகம்

    அன்புச் சகோதரியே,
    இசுலாமிய பிரச்சாரகர்கள்
    உனது வருகையால் பிசியாகி விட்டார்கள்
    உனது ஒவ்வொரு நகர்வையும், நடத்தையையும் கூர்மையாகப் பார்த்து
    விமர்சிப்பதில் ஆழமான ஆராய்ச்சியில் மூழ்கி விட்டார்கள்

    உலமாக்கள்
    மிக நீண்ட காலம் விவாதிக்கப்பட்டு வந்த குத்து விளக்குக்கு மத நம்பிக்கையா? கலாச்சாரமா?
    பதுவா வழங்க போதுமான ஆதரங்களைத் தேடுகிறார்கள்

    பெண்கள்/ இளசுகள்
    இஸ்லாமிய வரையறைகளைப் பேணி பாரம்பரிய மரபு முறைகளில் இருந்து வெளியே வந்து தம்மால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றிருக்கிறார்கள்,
    உனது வரலாற்றுப் பக்கங்களைத் தேடி படிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

    களனி பல்கலைக் கழக பேராசிரியர்கள்/ விரிவுரையாளர்கள்
    நூற்றாண்டுகள் கடந்தும் எம்மால் கொடுக்க முடியாமல் போன இஸ்லாத்தின் பரப்பைப் பற்றி ஆங்காங்கே தேடித் படிக்கத் தயாராகி விட்டார்கள்

    நீ உனது பாதையில் முன்னேறிக் கொண்டே இரு
    ஒவ்வொரு நடத்தையிலும் மார்கத்தின் வரையறைகளைப் பேணிக்கொள்

    நாம் எப்பவும் பிசியாகவே இருக்கிறோம்
    மனிதர்கள் பற்றிய ஆராய்ச்சி முடியும் வரை ...

    ReplyDelete
  6. சமூகத்தில் எந்தப் பெண்ணும் படித்து விடாதீர்கள்.
    அடுத்த தலைமுறையிலும் பிற ஆண்களிடமே (முஸ்லிமோ,காபிரோ) தேவைகளுக்காக தங்கியிருங்கள்.
    நாங்கள் எல்லாம் இப்போதும் எமது மனைவி மார்களை பிரசவத்துக்காக அன்னிய ஆண்களிடம் மானமிழந்து கூட்டிச் செல்வது போல.

    ReplyDelete
  7. Our sahabiya (RA) more than enough for sisters to follow. Read there biography and bring that in your life. if we are in doubt it is better avoid it.

    ReplyDelete
  8. Take up one idea. Make that one idea your life - think of it, dream of it, live on that idea. Let the brain, muscles, nerves, every part of your body, be full of that idea, and just leave every other idea alone. This is the way to success.
    Read more at: http://www.brainyquote.com/quotes/topics/topic_success.html

    ReplyDelete

Powered by Blogger.