ஏஞ்சிலா மெர்க்கல் மீது, விளாடிமிர் புடின் ஆத்திரம்
ஜேர்மனியில் அதிகரிக்கும் அகதிகளின் எண்ணிக்கையை பயன்படுத்தி அந்நாட்டு சான்சலரான ஏஞ்சிலா மெர்க்கலை பதவியிலிருந்து நீக்க ரஷ்ய ஜனாதிபதியான விளாடிமிர் புடின் சதி செய்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லத்வியா நாட்டின் சிறப்பு தகவல் தொடர்பு மையத்தின்(Nato) இயக்குனரான ஜானிஸ் சார்ட்ஸ் நேற்று பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘சிரியா நாட்டு ஜனாதிபதியான அசாத்துடன் இணைந்து தாக்குதல்களில் ரஷ்யா ஈடுப்பட்டு வருவதால், அந்நாட்டு மக்கள் வெளியேறி ஐரோப்பாவில் குடியேறி வருகின்றனர்.
குறிப்பாக, ஜேர்மனியில் அதிக எண்ணிக்கையில் அகதிகள் செல்வதால், அவர்களை எதிர்கொள்ள முடியாமல் ஜேர்மன் சான்சலர் திணறி வருகிறார்.
ஜேர்மனியில் அகதிகள் தொடர்பான பிரச்சனைகளை வலுவடைவதற்கு பின்னணியில் ரஷ்யா ஜனாதிபதியான விளாடிமிர் புடின் உள்ளார்.
இவ்வாறு ஜேர்மனியில் குழப்பம் ஏற்படுத்தும் விதத்தில் அந்நாட்டில் அகதிகள் பிரச்சனைகளை காரணம் காட்டி சான்சலரான ஏஞ்சிலா மெர்க்கலை பதவியிலிருந்து நீக்க விளாடிமிர் புடின் ரகசியமாக செயல்படுகிறார்.
அதேசமயம், ரஷ்யா மீது அமெரிக்கா கொண்டு வந்த பொருளாதார தடைக்கு ஜேர்மன் சான்சலர் உறுதியான ஆதரவு அளித்துள்ளார்.
இதுவும் ஏஞ்சலா மெர்க்கல் மீது ரஷ்யாவிற்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜானிஸ் சார்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
Post a Comment