Header Ads



தவக்குல் கர்மானின் இலங்கை விஜயமும், தொடரும் சர்ச்சைகளும்..!

(இது பேஸ்புக்கிலிருந்து கிடைத்த ஒரு பகுதி)

சகோதரர் றஸ்மின் மிஸ்குக்கு,

செய்தியும் சிந்தனையும் என்ற வீடியோ பக்கத்தில் தவக்குல் கர்மான் பற்றிய உங்களது உரையைக் கேட்டேன். ஆற்றொழுகப் பேசும் ஆற்றலைத் தந்த அல்லாஹ்வைப் புகழ்கிறேன். நாம் பெற்றிருக்கின்ற ஆற்றல்கள் அருள்கள் என்பதைப் போல அவை அமானிதம் என்பதையும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

மகன் செய்யும் காரியங்களுக்கு தந்தை பொறுப்பாளியாக முடியுமா? உங்களது தவறுகளுக்காக உங்கள் தந்தையை பலிக்கடாவாக்க முடியுமா?

தவக்குல் கர்மானின் இலங்கை விஜயத்தின் போது சில நிகழ்வுகள் ஜாமிஆ ஆஇஷா ஸித்தீக்காவினாலும் மற்றும் சில நிகழ்வுகள் அவரது வேறு தொடர்புகளினாலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

நீங்களும் பொது மக்களும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஓர் உதாரணத்தைக் குறிப்பிடுகிறேன்.

உங்களது நிகாஹ் மஜ்லிஸுக்கு சில SLTJ சகோதரர்களை அழைக்கின்றீர்கள். உங்கள் அழைப்பை ஏற்று உங்கள் ஊருக்கு அவர்கள் வருகிறார்கள். உங்கள் வீட்டில் நடந்த விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டு விட்டு மீண்டும் ஊருக்குத் திரும்பும் இடைவழியில் இஸ்லாம் விரும்பாத சில காரியங்களில் ஈடுபடுகிறார்கள் என வைத்துக் கொள்ளுங்கள்.

(தயவுசெய்து எமது இயக்க சகோதரர்கள் எவரும் அவ்வாறு பாவம் செய்ய மாட்டார்கள், அவர்கள் மலக்குகள் என்றெல்லாம் கூறாதீர்கள். உதாரணத்திற்காகத் தான் குறிப்பிடுகிறேன்)

இவ்வாறான நிகழ்வுகள் நடந்தால் விருந்துக்கு அழைத்த நீங்கள் பொறுப்பா? அல்லது முறை தவறி செயற்பட்ட அவர்கள் பொறுப்பா? உங்களது அழைப்பை ஏற்று வந்த காரணத்தினால் தான் இவ்வாறெல்லாம் நடந்தது. எனவே இவற்றுக்கெல்லாம் நீங்கள் தான் பதில் சொல்லியாக வேண்டும் என உங்களை நோக்கி ஒருவர் பேசினால் அவரைப் பற்றி என்ன கூறுவீர்கள்?

இந்த விடயத்தை இன்னும் தெளிவாக விளக்க வேண்டுமானால்,

அல்குர்ஆன் சிங்கள மொழித் தர்ஜுமாவை கொழும்பில் வெளியிட்டு வைத்தீர்கள். நாட்டின் பல பாகங்களிலிருந்தும் உங்கள் அமைப்பின் அழைப்பை ஏற்று ஆண்களும் பெண்களும் வந்திருந்தனர்.

நிகழ்ச்சி முடிந்ததன் பின்னர் தமது ஊருக்குப் அவர்கள் பயணப்படுகின்றனர். பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி வந்தவர்களில் சில பெண்கள் பஸ்ஸில் தனக்கு அஜ்னபிய்யான ஆணுக்குப் பக்கத்தில் இருந்து பயணித்தனர்.

இவ்வாறு இவர்கள் பயணித்ததால் மாநாட்டுக்கு அழைத்த SLTJ பொறுப்பாகுமா? அல்லது அப்பெண்களதும் அவர்களைக் கூட்டிவந்த ஆண்களினதும் மார்க்கம் பற்றிய அறியாமை காரணமா?

மேலுள்ள இரண்டு நிகழ்வுகளுக்கும் யார் காரணம்? அழைத்தவர்கள் காரணமா? அல்லது அழைக்கப்பட்டவர்களின் அசிரத்தையும் அறியாமையும் தான் காரணமா?

நிதானமாக யோசியுங்கள். குதர்க்கம் புரிய முயலாதீர்கள்.

இனி விடயத்துக்கு வருகிறேன்.

தவக்குல் கர்மான் இலங்கைக்கு வந்திறங்கியது முதல் அவர் நாட்டை விட்டு செல்லும் வரை அவரது எல்லா நிகழ்வுகளையும் ஜமாஅதே இஸ்லாமியும் ஆஇஷா ஸித்தீகாவுமே ஒழுங்குபடுத்தியதாகவே உங்களது உரையில் கூறியுள்ளீர்கள். மட்டுமல்ல அவர் வந்திறங்கும் போது கண்டி நடனத்துடன் அவரை வரவேற்றதையும் நிகழ்வுகளை அவரே குத்து விளக்கேற்றி ஆரம்பித்து வைத்ததையும் - கண்கள் இரண்டினாலும் நேரடியாகக் கண்ட சாட்சி போல - பேசியிருக்கிறீர்கள்.

உண்மையில் குறித்த நிகழ்வுகள் அனைத்தும் பட்டமளிப்பின் பின்னர் நடைபெற்ற நிகழ்வுகளாகும். ஒருபோதும் இந்நிகழ்வுகளை ஜமாஅதே இஸ்லாமியோ, ஆஇஷா ஸித்தீகாவோ நான் அறிந்த வகையில் ஒழுங்கு செய்யவில்லை.

தனிப்பட்ட சில நபர்களின் தொடர்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகளில் தவக்குல் கர்மான் கலந்து கொண்டதற்கும் இஸ்லாம் விரும்பாத செயல்களை அவர் செய்ததற்கும் எந்த வகையில் ஜமாஅதே இஸ்லாமியும் ஆஇஷா ஸித்தீகாவும் பொறுப்பாக முடியும்?

உங்களது கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு அஜ்னபியான ஆண்களோடு ஒன்றாக ஒரே சீட்டில் அமர்ந்து பயணித்த குறித்த பெண்களின் அறிவீனத்துக்காக SLTJ ஐ குறை சொல்வது நியாயமாகுமா?

ஒரு செய்தியை வெளியிட முன் அது தொடர்பாக ஆராய்வது ஒரு முஸ்லிமின் கடமையல்லவா? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன செய்தியைக் கூட அக்கு வேறு ஆணி வேறு பிய்ந்தறிந்து பார்ப்பவர்கள் (கட்டாயம் அவ்வாறு பார்க்க வேண்டும்) ஏனைய மனிதர்கள் விடயத்தில் இவ்வாறு ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லாத செய்தியைச் சொல்லபவர்களின் மறுமை நிலையை நன்கறிந்த நீங்கள்,

ஏனைய மனிதர்கள் விடயத்தில் தீர ஆராயாது வதந்திகளையும் அவதூறுகளையும் பரப்புபவர்களின் மறுமை நிலையை அறியவில்லையா?

-MZ Rizwanur Raheem-

21 comments:

  1. I also see the speech of Rasmin....
    What he is pointing out that is different than this writer has written. JI & Tht colleage they already known well about this lady's approach of Hand-shaking with guys and other attitutes...? then why they brought this lady for such a valuable Moulaviyyah Certification ceremoney... As they (JI & Ladies colleage) saying they are correct in Islam....!!!
    So, this writter is forcing public to change the way of thinking by telling lots of stupid stories and we all can know that this writter a Pre-Member/ Supporter of JI...That's all

    ReplyDelete
  2. சகோதரர் நல்லாத்தான் சொல்றிங்க,முன்னும் பின்னும் என்பது அல்ல பிரச்சினை(கலந்து கொண்ட நிகழ்வுகள்)அவர் கலந்து கொண்டது இஸ்லாத்திற்கு மாற்றமான நிகழ்வுகளில் என்பதுதான் பிரச்சினை,அதற்க்கு வலி வகுத்தது நீங்கள் அல்லவா?பதிலுக்கு நீங்கள் சொல்லும் காரணமான பஸ்ஸில் போவது வருவது எல்லாம்,உங்களை நீயாயம் சொல்ல தேடி கண்டுபிடித்த விதண்டாவாதங்கள்.

    ReplyDelete
  3. நானும் றஸ்மின் உரையைக் கேட்டேன்.
    சில போட்டோக்களை பார்த்து விட்டு
    சம்பவத்தை நேரில் கண்டது போல் கற்பனை செய்து பேசியிருக்கிறார் போலும்.
    எல்லா சம்பவங்களும் JI ஆல் நடத்தப் பட்டதாக கற்பனை பண்ணியிருக்கிறார்.
    அது சரி JI உங்கள் வழியில் குறுக்கிட்டதில்லையே, நீங்கள் மட்டும் ஏன் அவர்களையே சுற்றி வருகிறீர்கள்.
    வேறு சரக்கு ஒன்றும் இல்லையோ?

    ReplyDelete
  4. தவக்குல் கர்மான் வந்த விமானம்
    சென்றுவிட்டது ஆனால் நமது பேஸ்புக் விமானிகள் அவரை வைத்து இன்னும் ஓட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

    ஆயிஷா சீத்திகாவின் பட்டமளிப்பு
    விழாவில் குத்துவிளக்கோ கண்டிய
    நடனமோ இருக்கவில்லை.

    அடுத்த நாள் களனி பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு
    நிகழ்வில் ஒரு அதிதியாக தவக்குல்
    கர்மான் அழைக்கப்படுகின்றார்.

    களனி பல்கலைக்கழகம் முழுக்க
    முழுக்க பெரும்பான்மையினர் கையில் இருக்கும் ஒரு பல்கலைக்கழம் அங்கே நடக்கும்
    ஒரு நிகழ்வு கிராத் ஓதி ஆரம்பிக்கப்படவேண்டும் என்று
    எம்மால் எதிர்பார்க்க முடியாது.

    அவர்களது கலாச்சார முறைப்படிதான் அவர்களது
    அனைத்து நிகழ்வுகளும் இருக்கும்.

    உண்மையில் குத்துவிளக்கை தவக்குல் கர்மான் இதற்குமுன்னர்
    கண்டுகூட இருக்கமாட்டார்.

    அதை பற்றவைப்பதில் இருக்கும் ''சீரியஸ்னஸ்'' அல்லது அதன் கலாச்சாரப் பின்னனி அவருக்கு
    தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.

    ஜமாத்தே இஸ்லாமி சார்ந்த ஒரு
    மத்ராசவின் நிகழ்வுக்கு அழைக்கப்பட்டார் என்பதற்காக 
    அவர் செய்யும் எல்லாம் காரியத்துக்கும் ''பதில் சொல்லுமா ஜமாத்தே இஸ்லாமி'' என்று கட்டுரை எழுதுவது வேடிக்கை.

    ஒருவர் அனுவனுவாக இஸ்லாத்தைப் பின்பற்றுகிறாரா, 
    பாவமே செய்யாதவர் என்று சான்றிதழ்
    வழங்கிய பிறகுதான அவரை ஒரு நிகழ்வுக்கு அழைக்க
    வேண்டும் என்றால் மலக்குகளைத்தான் பிரதம அதிதியாகக் கொண்டு வரவேண்டிவரும்.

    ஒரு வேல இந்த பதிவுகளையும் பத்வாக்களையும்
    கர்மானுக்கு வாசிக்கக் கிடைத்தால் நோபல் பரிசை
    இலங்கையில் வைத்துவிட்டு குத்துவிளக்கை துருக்கிக்கு
    கொண்டு போயிருப்பார்.

    ReplyDelete
  5. You both are sparking fitna , very dangers for our community , I know this stay behind the group sector ,

    ReplyDelete
  6. இஸ்லாத்தில் இருப்பதை சொல்வதில் குற்றமில்லை ஒருவர் தவறு செய்யும்போது அதை அவரிடமே நேரடியாக சொல்லுவதுதான் முறையான செயல் ஆனால் இவர்கள் அதைவைத்து விளம்பரம் தேடுவதைத்தான் குறியாக இருக்கிறார்கள் அதேநேரம் தாங்கள் செய்யும் தவறுகளை நியாயப் படுத்தி மூடி மறைக்கிறார்கள்

    ReplyDelete
  7. Enda ungal ellorukkum vidhanda vathangal....idha vida muslimgalukku evvalavo naatula pirachchina nadakkuthu evanavathu prsurana?????

    ReplyDelete
  8. மார்க்கத்தின் பெயரால் வழிகேட்டைப் போதிப்பவர்கள் அடுத்தவர்களின் குறைகளை பூதாக்கரமாக்கி தாம் நல்லவர்கள் போல் நடிப்பதில் SLTJ கில்லாடிகள்

    ReplyDelete
  9. Dr.XHA...நல்லா தான் வக்காலத்துவாங்குரீங்க. ..
    உங்களுக்குத் தெரியுமா ஆயிஷா சித்தீக்கா நிர்வாகம் அவரை வரவழைத்து ....

    அவரைக் காட்டி, அவர் உங்களுக்கு ஓர் முன்மாதிரிப் பெண், நீங்கள் எல்லாம் இவரை முன்னோடியாகக் கொண்டு எதிராகாலத்தில் இவர் போன்று ஆளுமை மிக்க பெண்களாக வர வேண்டும் என மாணவிகளை உடசாகப்படுத்தினார்கள்.இதன் நோக்கம் என்ன..?

    அது மட்டுமன்றி அவர் BMICH ல் நடத்திய உரையில் இஸ்லாம் பற்றி ஏதும் பேசவில்லை. அவர் பேசியதெல்லாம் ஆண், பெண் சமத்துவமும், எல்லா மார்க்கங்களும் ஒன்று , ஒன்றாக வேலை செய்தல், அனைவரினதும் தாய் என வேடிக்கையான கருத்துக்களை கூறினார்.


    இன்னும் ,அடுத்த இலங்கையின் ஜனாதிபதி, மற்றும் பிரதமர் ஆயிஷா சித்திக்காவில் இருந்து உருவாக வேண்டும். எனவும் கூறினார். அதாவது ஒரு பெண் ஆட்சிபீடம் ஏற வேண்டும் என்று கூறியுள்ளார். உண்மையில் இது முற்றிலும் இஸ்லாம் கூறுவதற்கு மாற்றமான கருத்து.
    عَنْ أَبِي بَكْرَةَ رضي الله عنه قَالَ :
    ( لَقَدْ نَفَعَنِي اللَّهُ بِكَلِمَةٍ سَمِعْتُهَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيَّامَ الْجَمَلِ بَعْدَ مَا كِدْتُ أَنْ أَلْحَقَ بِأَصْحَابِ الْجَمَلِ فَأُقَاتِلَ مَعَهُمْ . قَالَ : لَمَّا بَلَغَ
    رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ أَهْلَ فَارِسَ قَدْ مَلَّكُوا عَلَيْهِمْ بِنْتَ كِسْرَى قَالَ : لَنْ يُفْلِحَ قَوْمٌ وَلَّوْا أَمْرَهُمْ امْرَأَةً )
    رواه البخاري (4425)،

    ஒரு சமூகம் வெற்றி பெற மாட்டாது, அவர்களின் விடயத்தை ஒரு பெண் பொறுப்பேற்றால் ....

    உண்மையில் வளர்ந்து வரும் இளம் மாணவர்கள் தவறான முறையில் வழிநடத்துப்படுவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் , எமது வாழ்க்கை எமது மார்க்கத்தை சுற்றியிருக்க
    வேண்டுமே தவிர சமூகத்தையல்ல,

    இது முற்றிலும் ஈரானின் சிந்தனை, அல்லாஹ் அவர்களுக்கும் எங்களுக்கும் உருதியான ஈமானைத் தந்து நேரான பாதையை காட்ட வேண்டும்.

    இவரது உரையைக் கேட்ட பின் நான் விளங்கிக் கொண்டது, இவர் ஆண்களுக்குப் போன்ற சம உரிமையை பெண்களுக்கும் கேட்கிறார், என்பது. இந்தத் தவறான கொள்கை எங்கள் நாட்டில் உள்ளசில இயக்கங்களிடையே இருந்து வருவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

    எனவே, இவரது சில கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியுமே தவிர இவரையோ, இவரது கருத்துக்களை முழுமையாக பின்பற்ற முடியாது,

    இவர், இவர் சார்ந்தவர்களுக்காக உரிமையையும், மனித நேயத்தையும் தவிர இஸ்லாம் பற்றியோ, இஸ்லாத்திற்காகவோ என்றும் வாதாடவுமில்லை, போராடவுமில்லை. அப்படித்தான் ஆவர் போராடியிருந்தால், அவருக்கு ஒருபோதும் ல்மேற்கத்தேயம் நோபல் பரிசும் கொடுத்திருக்காது.

    எனவே இவர் சார்ந்த பிரச்சினை குத்துவிளக்கேற்றியது மட்டுமல்ல, உண்மையில் இவர் அந்த நிகழ்வுக்கும் பொருத்தமில்லாத ஒருவர், ஆகவே இவர் முலம் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினைகளுக்கான முழுப்பொருப்பையும் ஆயிஷா சித்திக்கா நிர்வாகம் தான் ஏற்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. @ Ifham Imran I agree to your point 100% and I have no second thought regarding that hadees, which I always mention in JM. We can take ideas from women but we can never make them the leader or working under them. For feminists this may sound barbaric well so be it. Creators knows better than us. Having said that it does not mean we can oppress women in any way with in the sharia.

      Delete
  10. don't argue among us, it will not work

    ReplyDelete
  11. @Rizwanul, First you should know the This Karman is a Muslim women like others; not a Islamic Women and doesn't practice mahram and simply interactive with male. Inviting this kind lady to a Islam university is not good decision. And always you all try to convince people to make you all right instead of accepting the wrongs. Hence this is the level of all of your Akheeda.

    ReplyDelete
  12. Don't waste your precious time in arguing!
    We all are not Angels!

    ReplyDelete
  13. First of all..
    Pls be known that NOBLE PRIZE is provided only for the people who benifing JEWS or ILLUMINATI agenda..

    ReplyDelete
    Replies
    1. @ தேவநாயகம்! உங்களுக்கு தெரிந்த விடயம் இங்குள்ள பல முஸ்லிம்களுக்கு தெரியாமல் இருக்கின்றது என்பது கவலைக்கிடமான விடயம்.
      SLTJ பலரின் குறைகளை அம்பலப்படுத்துதில் வல்லவர்கள். அதற்காக JI செய்தது சரி என்று கூர்மையாது. ஆண், பெண் சமத்துவம் பேசும் ஒரு பெண்ணை ( யூதரின் அல்லக்கை- பாவம் உண்மையில் கர்மான் அவருக்கே அவர் ஒரு Zionist Muppet என்று தெரியாமல் இருக்கும்.) வழிகாட்டியாகவோ , முன்மாதிரியாகவோ காட்ட அழைத்திருக்கக்கூடாது.

      Delete
  14. Dear all, taking goodness from her.Correct the wrongness of her via polite way.

    ReplyDelete
  15. இந்த அரப்படித்த கும்பலஹல்தான் நாட்ல பெரிய அரிஞர்ஹ்கர்களும் நேர்வேளிபெற்ற நல்லடியகளும் போல. உங்களுடைய குழப்பங்கள் உங்களுடைய இடங்களுக்கு மட்டுபடவேண்டும். பொது இடங்களில் வீக்கம் காட்ட வேண்டாம். உங்களுடை அரப்படிப்புகள் உங்களுக்குள்ளயே இருக்கட்டும். இல்லாவிட்டால் தோல உரித்து உப்பு போடப்படும்

    ReplyDelete
  16. SLTJ Brothers better not lock horns with other Islamic companions. I regard the Jamaath-e-Islaami is not accountable for the events which go beyond their purview.

    ReplyDelete
  17. Have supported Sltj up to now.but they are the worst I believe now.every individual look at your selves..don't talk like angels.

    ReplyDelete
  18. Dear Muslims Brothers and Sisters of Sri Lanka.

    It seems this lady with without knowledge has involved in issues of Kuffar.

    Regardless of JI or Aisha Sideeka are responsible or not. I have a serious questions to those who consider this lady as good example to our sisters...

    If she has no knowledge of Kuffar action.. What our sisters have to learn from her ?
    Why some of you consider this lady at high status and invite to your programs ?
    Are you going to spoil our sisters also into same culture.

    I strictly warn those who try to innovate wrong DAWA methodology.. Please turn to the DAWA methodology of SALAF us saleheens.

    No women at the time of SALAF,,, made visit in this open manner to convey Islam.

    IF you follow a path other than the path of SAHAABA, TABIEEN, ATBAUTTABIEEN.. you will be lead to hell fire.. Read the Surah Nisah 115th verse.

    May Allah guide us in correct path.

    ReplyDelete

Powered by Blogger.