பொம்மையின் கால்களை, போராட்டத்தில் இறக்கலாமா..?
-எம்.ரிஸான் ஸெய்ன்-
இழந்த கால்கள்
எங்கே?
வினவுவது விளங்குகிறது..
சுவர்க்கம்
நோக்கிய நடையில்
என்னை
முந்திக் கொண்டு...
என் பொம்மையின் கால்களை
போராட்டத்தில்
இறக்கலாமா
அதன் கால்களையும்
இழக்கலாமா
என்றான கற்பனை
என்னில்
முன்னும் பின்னுமாய்...
முடமாக்கும்
உன் முனைப்பு
என் ஈமானை
திடமாக்கும் திளைப்பில்
ஆன்மீக உள்ளீடு
உருவம் பெற்றதாய்...
Post a Comment